பொது செய்தி

இந்தியா

சீக்ரெட் சிங்காரம்

Added : செப் 13, 2021
Share
Advertisement
'மாஜி' மந்திரியை காணலையே! பேருல 'ரோஷ'த்தை வைத்துள்ள பூங்கா நகரின் 'சத்ரபதி' பெயரில் உள்ள தொகுதியில் ஓ..ஹோ..ன்னு கொடிக்கட்டி உயர்ந்து, மந்திரியாக இருந்தவரு, தங்க நகை, நிதி, முதலீட்டு நிறுவன மோசடி வழக்கில் சிக்கினாரு. தன்னை காப்பாற்றிக்க கை கட்சியை விட்டு விலகினாரு. பூ கட்சியில் சேர முயன்றும் அவரை சேர்த்துக்கல.இப்போ எங்கே இருக்காரு; என்ன செய்றாருன்னு அட்ரஸே காணோம்.

'மாஜி' மந்திரியை காணலையே! பேருல 'ரோஷ'த்தை வைத்துள்ள பூங்கா நகரின் 'சத்ரபதி' பெயரில் உள்ள தொகுதியில் ஓ..ஹோ..ன்னு கொடிக்கட்டி உயர்ந்து, மந்திரியாக இருந்தவரு, தங்க நகை, நிதி, முதலீட்டு நிறுவன மோசடி வழக்கில் சிக்கினாரு. தன்னை காப்பாற்றிக்க கை கட்சியை விட்டு விலகினாரு. பூ கட்சியில் சேர முயன்றும் அவரை சேர்த்துக்கல.இப்போ எங்கே இருக்காரு; என்ன செய்றாருன்னு அட்ரஸே காணோம்.

இவர் பேர்லையும் அந்த நிதி நிறுவன முறைகேடு வழக்கின் சிக்கல் இருக்கு. தீர்வு கிடைக்காமல், அரசியலை விட்டு ஒதுங்கி இருக்காராம்.'கை' கட்சியில் உள்குத்து!எதிர்க்கட்சித் தலைவருக்கு நெருக்கமான மைசூரு மாவட்ட 'மாஜி' மந்திரியான 'டாக்டர்' ஒருவர், அடுத்த சட்டசபைத் தேர்தலுக்கு தயாராகி வர்றாரு.டி.நரசிபுரா தொகுதி மாஜி எம்.எல்.ஏ., தற்போது தொகுதி மாறி, எச்.டி.கோட்டே தொகுதியில் போட்டியிட தயாராகி வராராம்.ஆனால், அதே எச்.டி.கோட்டே தொகுதியில் செல்வாக்கு உள்ள மாநில கை தலைவருக்கு நெருக்கமானவரு சீட் கேட்கிறாரு.

தொகுதியில் தாராளமாக செலவு செய்துட்டு வராரு.எச்.டி. கோட்டேயிலும் எதிர்க் கட்சித் தலைவர் ஆதரவாளருக்கும், மாநில தலைவரோட ஆதரவாளருக்கும் கடும் போட்டி வலுத்து வருது. இவர்களில் ஒருவருக்கு சீட் கிடைத்தால் அவரை மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ தோற்கடிப்பாங்கன்னு அரசியல் வட்டாரத்தில் பேசிக்கிறாங்க.புலம்பல் சத்தம் ஜாஸ்தி!பெலகாவி மாவட்டம், காக்வாடா தொகுதியில் 'கை' கார அசம்பிளிக்காரர் 'ஸ்ரீ'' யை பூ கட்சிக்கு இழுக்கும் நேரத்தில் பண பேரம் நடத்தினாங்களாம். ஆனால் அவரோ, 'சிங்கிள் பைசா வேணாம், ஆட்சி அமைச்சதும் நல்ல பதவி வேணும்'னு கேட்டாராம்.

அப்போ, பலருக்கு கட்டு கட்டா நோட்டுகள் சூட்கேசில் வீட்டு வாசலுக்கு போய் சேர்ந்தது. பணமே வாங்காமல், கட்சியை விட்டு வந்தவருக்கு புதிய முதல்வரோட அமைச்சரவையில் பதவி தரலையாம். இதனால் அதிருப்தியில் இருக்கிறாரு. அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதையா போச்சுன்னு புலம்பல் சப்தம் ஜாஸ்தியா கேட்குதுபதவியா... அல்வாவா?மஹாதேவபுரா தொகுதி அசம்பிளிக்காரருக்கு மந்திரி பதவி கொடுத்தாங்க; பின் பறிச்சிக்கிட்டாங்க.புதிய முதல்வர் கேபினட்டில் 'ஜாதி' கோட்டாவில் 'மாஜி' துணை முதல்வருக்கு பதவி வழங்கிட்டதால,

மஹாதேவபுராகாரரை மாநில பூ கட்சியின் தலைவராக்க போறதா ஆசை காட்டி அடக்கி வெச்சாங்க. அவரோட ஆசையை எப்போ நிறைவேற்ற போறாங்களோ அல்லது, பதவி கொடுக்காமலேயே 'அல்வா' கொடுத்திடுவாங்களோ தெரியல.மாநில தலைவர் பதவி கிடைக்கும்னு வழிமீது விழி வைத்து காத்திருக்காரு. அது வெறும் கனவா போயிடுமோன்னு ஆதரவாளர்கள் அங்கலாய்க்கிறாங்க!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X