பள்ளி செல்லாதவர்கள், இடை நின்றவர்கள் 1,418 பேர் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி செல்லாதவர்கள், இடை நின்றவர்கள் 1,418 பேர்

Added : செப் 13, 2021
Share
.மாவட்டத்தில் கணக்கெடுப்பு பணியில் தகவல்அனைவரும் கல்வி கற்க மத்திய, மாநில அரசுகள் கல்வித் துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எனினும், சிலர் குடும்ப சூழ்நிலை, வறுமை, ஆர்வமின்மை உள்ளிட்ட காரணங்களால் பள்ளிக்கு செல்லாமலும், பள்ளியை விட்டு இடை நிற்பதுமாக உள்ளனர். இதனால் மாணவ, மாணவியரின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது.மாணவர்களின் எதிர்காலத்தை

.மாவட்டத்தில் கணக்கெடுப்பு பணியில் தகவல்அனைவரும் கல்வி கற்க மத்திய, மாநில அரசுகள் கல்வித் துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எனினும், சிலர் குடும்ப சூழ்நிலை, வறுமை, ஆர்வமின்மை உள்ளிட்ட காரணங்களால் பள்ளிக்கு செல்லாமலும், பள்ளியை விட்டு இடை நிற்பதுமாக உள்ளனர்.

இதனால் மாணவ, மாணவியரின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது.மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் பள்ளி செல்லா குழந்தைகளே இருக்கக் கூடாது என்பதற்காக, 6 முதல், 19 வயது வரை உள்ளவர்கள் பற்றிய கணக்கெடுப்பு நடத்த மத்திய கல்வி மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை அறிவுறுத்தியுள்ளது.மாவட்டத்தில் கடலுார், அண்ணாகிராமம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, கீரப்பாளையம், புவனகிரி, பரங்கிப்பேட்டை, குமராட்சி, காட்டுமன்னார்கோவில், நல்லுார், விருத்தாசலம், மங்களூர், கம்மாபுரம் என 14 ஒன்றியங்களில் கடந்த மாதம் 10ம் தேதி கணக்கெடுப்பு பணி துவங்கியது.இப்பணியில் வட்டார மேற்பார்வையாளர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், தன்னார்வலர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த 300 பேர் ஈடுபட்டனர். பள்ளிகள் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகள், செங்கல் சூளை, கட்டடப் பணி, சாலைப் பணி, ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், இலங்கை அகதிகள் முகாம் என பல்வேறு இடங்களில் இப்பணி நடந்தது.இது வரை பள்ளி செல்லாதவர்கள் மற்றும் இடை நின்றவர்கள் 1,418 பேர் என கண்டயறிப்பட்டுள்ளது.

இதில், 1,232 பேர் அருகில் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவிப் பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில், இலவச கட்டாயக் கல்வி சட்டத்தில் வயதிற்கேற்ப 1 முதல் பிளஸ் 2 வரை சேர்க்கப்பட்டுள்ளனர்.மீதமுள்ள 186 பேரை பள்ளிகளில் சேர்க்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.இது குறித்து கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மாவட்டத்தில் பள்ளி செல்லாதவர்கள், பள்ளியை விட்டு இடை நின்றவர்கள் கணக்கெடுப்பு கடந்த மாதம் 10ம் தேதி துவங்கி, 31ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு பணி துவங்கியது.இப்பணி வரும் 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை பள்ளி செல்லாதவர்கள், பள்ளியை விட்டு இடை நின்றவர்கள் 1,418 பேர் என கண்டறியப்பட்டுள்ளனர், என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X