ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி

Added : செப் 13, 2021
Share
சிதம்பரம் : சேத்தியாத்தோப்பு அடுத்த கானுாரில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கணினி தகவல் தொழில்நுட்பம் குறித்த 5 நாள் பயிற்சி நடந்தது. கானுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அடிப்படை கணினி தகவல் தொழில்நுட்ப பயிற்சி நடந்தது. கடந்த 6 ம் தேதி துவங்கி 11 ம் தேதி வரை 5 நாட்கள் நடந்த இப்பயிற்சியை தலைமை ஆசிரியர் பாண்டுரங்கன் துவக்கி வைத்தார். முதுகலை கணினி

சிதம்பரம் : சேத்தியாத்தோப்பு அடுத்த கானுாரில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கணினி தகவல் தொழில்நுட்பம் குறித்த 5 நாள் பயிற்சி நடந்தது.

கானுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அடிப்படை கணினி தகவல் தொழில்நுட்ப பயிற்சி நடந்தது. கடந்த 6 ம் தேதி துவங்கி 11 ம் தேதி வரை 5 நாட்கள் நடந்த இப்பயிற்சியை தலைமை ஆசிரியர் பாண்டுரங்கன் துவக்கி வைத்தார். முதுகலை கணினி ஆசிரியர் மலர்விழி பயிற்றுவித்தார். இதில் கூடலையாத்துார், வலசக்காடு, பேரூர், கானுார் உட்பட பல்வேறு அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர். இந்த பயிற்சியின் மூலம் அடிப்படை கணினி பயிற்சி, லிபரான், கல்வி தகவல் மேலாண்மை, பள்ளி கல்வி மேலாண்மை, கற்றல் குறைபாடுகளை களைதல் ஆகிய தலைப்புகளில் தினமும் ஒவ்வொறு பயிற்சிகள் நடத்தப்பட்டது. கூடலையாத்துார் தலைமையாசிரியர் இருதயராஜ் நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X