பொது செய்தி

தமிழ்நாடு

விநாயகர் சிலைகள் விஜர்சனம் சில்வர் பீச்சில் தடை விதிப்பு

Added : செப் 13, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுார் சில்வர் பீச்சில் விநாயகர் சிலைகளை விஜர்சனம் செய்ய போலீசார் தடை விதித்தனர்.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அரசு கட்டுப்பாடுகளை விதித்தது.கடந்த 10ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. மூன்றாம் நாளான நேற்று கடலுார் சில்வர் பீச்சில் சிலைகளை விஜர்சனம் செய்ய பொதுமக்கள் காலை முதல் திரண்டனர். உப்பனாற்று பாலத்தில்

கடலுார் : கடலுார் சில்வர் பீச்சில் விநாயகர் சிலைகளை விஜர்சனம் செய்ய போலீசார் தடை விதித்தனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அரசு கட்டுப்பாடுகளை விதித்தது.கடந்த 10ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. மூன்றாம் நாளான நேற்று கடலுார் சில்வர் பீச்சில் சிலைகளை விஜர்சனம் செய்ய பொதுமக்கள் காலை முதல் திரண்டனர். உப்பனாற்று பாலத்தில் ரெட்டிச்சாவடி இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தி, கடற்கரையில் சிலைகளை விஜர்சனம் செய்ய அனுமதியில்லை என்றனர்.அருகிலுள்ள உப்பனாற்றிற்கு செல்லஅனுமதி உண்டு எனக் கூறி திருப்பி அனுப்பினர். இதனால் ஏமாற்றத்துடன் திரும்பிய பொது மக்கள் உப்பனாற்றில் சிலைகளுக்கு கற்பூரம் ஏற்றி விஜர்சனம் செய்தனர். உள்ளூர் மக்களுக்கு மட்டுமே சில்வர் பீச்சில் விஜர்சனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.கடலுார் கெடிலம் ஆறு, பெண்ணையாறு, நல்லவாடு, சுப உப்பலவாடி, தாழங்குடா, துறைமுகம் கடற்கரை பகுதியிலும்சிலைகள் விஜர்சனம் செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X