பொது செய்தி

தமிழ்நாடு

பா.ஜ.,வினர் மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு

Added : செப் 13, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விநாயகர் சிலையை கரைக்க ஊர்வலமாக சென்றபோது, பா.ஜ.,வினர் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு நிலவியது.விநாயகர் சதுர்த்தி தினத்தன்று, விழுப்புரம் பா.ஜ., மாவட்ட அலுவலகத்தில் 6 அடி உயர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யப்பட்டது. இந்த சிலையை நேற்று வில்லியனுார் சங்கராபரணி ஆற்றில் கரைக்க ஊர்வலமாக எடுத்துச் செல்ல பா.ஜ.,வினர் ஏற்பாடு

விழுப்புரம் : விநாயகர் சிலையை கரைக்க ஊர்வலமாக சென்றபோது, பா.ஜ.,வினர் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு நிலவியது.
விநாயகர் சதுர்த்தி தினத்தன்று, விழுப்புரம் பா.ஜ., மாவட்ட அலுவலகத்தில் 6 அடி உயர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யப்பட்டது. இந்த சிலையை நேற்று வில்லியனுார் சங்கராபரணி ஆற்றில் கரைக்க ஊர்வலமாக எடுத்துச் செல்ல பா.ஜ.,வினர் ஏற்பாடு செய்தனர்.தகவலறிந்த டி.எஸ்.பி., பழனிச்சாமி தலைமையிலான போலீசார் பா.ஜ., அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு, தாங்களே எடுத்துச்சென்று கரைப்பதாக கட்சியினரிடம் போலீசார் கூறினர்.அப்போது, காந்தி சிலை வரை பா.ஜ.,வினர் ஊர்வலமாக வருவதாக கூறினர். இதன் பின், போலீசார் ஏற்பாடு செய்த வாகனத்தில் விநாயகர் சிலையை எடுத்துக்கொண்டு வந்தனர்.

விழுப்புரம் நான்குமுனை சிக்னலில் வந்தபோது, விநாயகர் சிலை வாகனம் திடீரென எல்லீஸ்சத்திரம் சாலையில் சென்றது. இதையறிந்த பா.ஜ.,வினர், எல்லீஸ்சத்திரம் சாலையில் திரண்டு 12:00 மணியளவில் மறியலில் ஈடுபட முயன்று, வில்லியனுார் ஆற்றிற்கு எடுத்து செல்வதாக கூறிவிட்டு, ஏன் மாற்று வழியில் செல்கிறீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின், வீடூர் அணையில் கரைக்க எடுத்துச் செல்வதாக போலீசார் கூறினர்.இதையடுத்து, விநாயகர் சிலையை வீடூர் அணைக்கு எடுத்துச் சென்று போலீசார் மற்றும் பா.ஜ.,வினர் கரைத்தனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X