பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்... 48,733 பேர் ஊக்கப்பரிசு வழங்கி மக்களை ஈர்த்த சங்கங்கள்

Added : செப் 13, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 529 மையங்களில் நடந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில், பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்த முதல் 70 ஆண்களுக்கு தலா ஒரு லிட்டர் பெட்ரோல், 100 பெண்களுக்கு சில்வர் பாத்திரம் வழங்கப்பட்டது.தமிழக அரசு உத்தரவுபடி, கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுதும் பொதுமக்கள் கூடும்
 மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்... 48,733 பேர்  ஊக்கப்பரிசு வழங்கி மக்களை ஈர்த்த சங்கங்கள்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 529 மையங்களில் நடந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில், பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்த முதல் 70 ஆண்களுக்கு தலா ஒரு லிட்டர் பெட்ரோல், 100 பெண்களுக்கு சில்வர் பாத்திரம் வழங்கப்பட்டது.தமிழக அரசு உத்தரவுபடி, கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுதும் பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்கள், அங்கன்வாடி, அரசு பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், தேசிய ஊரக வேலை வாய்ப்பு நடைபெறும் இடம் உட்பட 529 மையங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு மெகா முகாம் நேற்று நடந்தது.காலை 7:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்த முகாமை கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்.ஏ.டி.எஸ்.பி., ஜவஹர்லால், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் பூங்கொடி, வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) வெங்கடேசன், மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.தொடர்ந்து கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையம், ஏமப்பேர் அரசு பள்ளி உட்பட பல்வேறு மையங்களுக்குச் சென்று கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.ஊக்கப்பரிசு கள்ளக்குறிச்சி நகராட்சி சார்பில் தீயணைப்பு நிலையம், வ.உ.சி., நகர், ராஜாநகர், புத்துமாரியம்மன் கோவில் வளாகம் உட்பட 15 இடங்களில் தடுப்பூசி மையம் அமைக்கப்பட்டது. இதில், தடுப்பூசி செலுத்தி கொள்ளும் மக்களை ஊக்குவிப்பதற்காக, ரோட்டரி சங்கம், அனைத்து வியாபாரிகள் சங்கம், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம், நகைக்கடை உரிமையாளர் சங்கம் இணைந்து நகராட்சி மூலம் ஊக்கப் பரிசு வழங்கினர்.முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வரும் முதல் 70 ஆண்களுக்கு தலா ஒரு லிட்டர் பெட்ரோல், 100 பெண்களுக்கு சில்வர் தட்டு என மொத்தம் 15 மையங்களில் 1,500 பெண்களுக்கும், 1,050 ஆண்களுக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.மாவட்டத்தில் நடந்த சிறப்பு முகாமில் மதியம் 3.30 மணி நேர நிலவரப்படி 18-44 வயதுக்குட்பட்டவர்கள் 26 ஆயிரத்து 992 பேர், 45-59 வயதுக்குட்பட்டவர்கள் 15 ஆயிரத்து 179 பேர், 60 வயதுக்கு மேற்பட்டோர் 6,562 பேர் என மொத்தம் 48 ஆயிரத்து 733 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் 41 ஆயிரத்து 892 பேர் முதல் தவணை, 6,841 பேர் இரண்டாம் தவணை செலுத்திக்கொண்டனர்.டோஸ் பற்றாக்குறைகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த சிறப்பு முகாமில் பெரும்பாலான கிராமங்களுக்கு 150க்கும் குறைவான டோஸ் தடுப்பூசிகளே வழங்கப்பட்டது. இதனால் சின்னசேலம், சங்கராபுரம், ரிஷிவந்தியம், திருக்கோவிலுார் உட்பட பல்வேறு ஒன்றியங்களில் மதியம் 12:30 மணிக்குள் தடுப்பூசிகள் தீர்ந்தன. இதனால் மதியம் 1:00 மணிக்கு மேல் தடுப்பூசி செலுத்துவதற்காக சிறப்பு மையங்களுக்கு சென்ற மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.இதேபோன்று, சின்னசேலம் தாலுகாவில் 12:30 மணிக்கே ஒதுக்கீடு செய்யப்பட்ட தடுப்பூசி டோஸ்கள் தீர்ந்ததால், அதன் பிறகு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X