சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நெல்லிக்குப்பத்தில் பெண்ணிடம் மொபைல் போன், பணம் வழிப்பறி

Added : செப் 13, 2021
Share
Advertisement
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் பெண்ணிடம் மொபைல்போனை பறித்து சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.நெல்லிக்குப்பம் ஸ்ரீவாரி நகரை சேர்ந்த ஷாஜாமொய்தீன் மனைவி மும்தாஜ்பேகம்,55; இவர் நேற்று முன்தினம் இரவு கொத்வாபள்ளியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். பின், இரவு 9 மணிக்கு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அவரது கையில் மொபைல் போன், பர்ஸ் வைத்திருப்பதை

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் பெண்ணிடம் மொபைல்போனை பறித்து சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.

நெல்லிக்குப்பம் ஸ்ரீவாரி நகரை சேர்ந்த ஷாஜாமொய்தீன் மனைவி மும்தாஜ்பேகம்,55; இவர் நேற்று முன்தினம் இரவு கொத்வாபள்ளியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். பின், இரவு 9 மணிக்கு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அவரது கையில் மொபைல் போன், பர்ஸ் வைத்திருப்பதை பார்த்த மர்ம நபர் பைக்கில் பின் தொடர்ந்து சென்றுள்ளார். அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு வெளியே இருட்டாக இருந்த இடத்தில் நடந்து சென்ற மும்தாஜ்பேகத்தின் கையில் வைத்திருந்த மொபைல் போன் மற்றும் பர்சை பறித்தார். கூச்சல் போட முயன்ற மும்தாஜ்பேகத்தை கொலை செய்து விடுவேன் என மிரட்டி விட்டு மொபைல் மற்றும் பர்சுடன் தப்பிச் சென்றார். இதில் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள மொபைல் போன் மற்றும் பர்சில் இருந்த ரூ 2000 பறிபோனது. நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X