சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விவசாயியை தாக்கிய மூன்று பேருக்கு வலை 

Added : செப் 13, 2021
Share
Advertisement
காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் அருகே முன்விரோதம் காரணமாக விவசாயியை தாக்கிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.காட்டுமன்னார்கோவில் அடுத்த வடக்கு கஞ்சங்கொல்லையைச் சேர்ந்த தனபாலன் மகன் ராஜாகண்ணு, 41; இவரது பெரியப்பா ராமலிங்கம் மகன் ரமேஷ், 45; இருவரும் ஒரே வீட்டில் வசிக்கின்றனர். இவர்களிடையை சொத்துப் பிரச்னையில் முன்விரோதம் உள்ளது.நேற்று முன்தினம் ராஜாகண்ணு

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் அருகே முன்விரோதம் காரணமாக விவசாயியை தாக்கிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

காட்டுமன்னார்கோவில் அடுத்த வடக்கு கஞ்சங்கொல்லையைச் சேர்ந்த தனபாலன் மகன் ராஜாகண்ணு, 41; இவரது பெரியப்பா ராமலிங்கம் மகன் ரமேஷ், 45; இருவரும் ஒரே வீட்டில் வசிக்கின்றனர். இவர்களிடையை சொத்துப் பிரச்னையில் முன்விரோதம் உள்ளது.நேற்று முன்தினம் ராஜாகண்ணு வீட்டை மராமத்துப் பணிகளை செய்து மேல் கூரையில் தார்பாய் போட்டு கட்டினார். இதனை பங்காளி ரமேஷ் தார்பாய் போட்டு கட்டக் கூடாது என தடுத்தார். இதனால் தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர். அப்போது அருகிலிருந்த ரமேஷ் மனைவி ஜெயா, மகன் ராகேஷ் ஆகியோர் சேர்ந்து ராஜாகண்ணுவை திட்டி, தாக்கி, கத்தியால் குத்தினர். காயமடைந்த அவர் மேல் சிகிச்சைக்கு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில் சேர்த்தனர்.இது குறித்து ராஜா கண்ணு கொடுத்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோவில் சப்இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப் பதிந்து ரமேஷ், மனைவி ஜெயா, மகன் ராகேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X