சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காதல் விவகாரத்தில் மோதல் எட்டு பேர் மீது வழக்குப் பதிவு

Added : செப் 13, 2021
Share
Advertisement
காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் அருகே காதல் தகராறில் 2 பேர் காயமடைந்தனர். 8 பேர் மீது காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.காட்டுமன்னார்கோவில் அடுத்த நடுக்கஞ்சங்கொல்லையைச் சேர்ந்த மாரியப்பன் மகன் மனோபாலா, 19; கல்லுாரி மாணவர். அதே தெருவைச் சேர்ந்த கஜேந்திரன், 45; இவரது மகளை மனோபாலா காதலித்தார். நேற்று முன்தினம் வீட்டு வழியாக சென்ற

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் அருகே காதல் தகராறில் 2 பேர் காயமடைந்தனர். 8 பேர் மீது காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

காட்டுமன்னார்கோவில் அடுத்த நடுக்கஞ்சங்கொல்லையைச் சேர்ந்த மாரியப்பன் மகன் மனோபாலா, 19; கல்லுாரி மாணவர். அதே தெருவைச் சேர்ந்த கஜேந்திரன், 45; இவரது மகளை மனோபாலா காதலித்தார். நேற்று முன்தினம் வீட்டு வழியாக சென்ற மனோபாலாவை, கஜேந்திரன், அவரது தம்பி பாலமுருகன் ஆகியோர் வழிமறித்து, மகளை ஏன் காதலிக்கிறாய் என கண்டித்தனர். இதனால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.இதையறிந்த மனோபாலாவின் அண்ணன் மனோராஜ், உறவினர்கள் செல்வம், செல்வம் மகன் விக்னேஷ், மனைவி சித்ரா ஒரு கோஷ்டியாகவும், கஜேந்திரன், தம்பி பாலமுருகன், மனைவி லதா, உறவினர் நவீன் ஒரு கோஷ்டியாகவும் தாக்கிக் கொண்டனர். இதில் மனோபாலா, கஜேந்திரன் காயமடைந்து காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்த புகார்களின் பேரில் பாலமுருகன், 40; கஜேந்திரன், 45; நவீன், 19; லதா, 38; செல்வம், 48; மனோராஜ்,26; விக்னேஷ், 23; சித்ரா, 35; ஆகியோர் மீது காட்டு மன்னார்கோவில் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X