பொது செய்தி

தமிழ்நாடு

நீர் விளையாட்டுகள் வளாகம் பரங்கிப்பேட்டையில் திறப்பு

Added : செப் 13, 2021
Share
Advertisement
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டையில், நீர் விளையாட்டுகள் வளாகத்தை நேற்று வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.பரங்கிப்பேட்டையில், பேரூராட்சி சார்பில், ரூ. 58 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில், அண்ணாமலை பல்கலைக் கழக கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையம் எதிரில், நீர் விளையாட்டுகள் வளாகம் அமைக்கப்பட்டது. நீர் விளையாட்டு வளாகத்திற்கு தேவையான உபகரணங்களான கயாக்ஸ், கேனோஸ்,

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டையில், நீர் விளையாட்டுகள் வளாகத்தை நேற்று வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.

பரங்கிப்பேட்டையில், பேரூராட்சி சார்பில், ரூ. 58 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில், அண்ணாமலை பல்கலைக் கழக கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையம் எதிரில், நீர் விளையாட்டுகள் வளாகம் அமைக்கப்பட்டது. நீர் விளையாட்டு வளாகத்திற்கு தேவையான உபகரணங்களான கயாக்ஸ், கேனோஸ், துடுப்பு படகு, உயிர்காக்கும் படகு ஆகியவற்றை அண்ணாமலை பல்கலைக்கழக உயிரின ஆராய்ச்சி மையம் ஏற்றுக் கொண்டது. அதற்கான திறப்பு விழா நேற்று நடந்தது.கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மைய இயக்குநர் ஸ்ரீநிவாசன், எஸ்.பி., சக்தி கணேசன், கூடுதல் கலெக்டர் பவன்குமார், சப் கலெக்டர் மதுபாலன், டி.எஸ்.பி., ரமேஷ் ராஜ் முன்னிலை வகித்தனர். அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் ஞானதேவன் வரவேற்றார்.நீர் விளையாட்டு வளாகத்தை, வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் திறந்து வைத்து, படகு சவாரியை, துவக்கி வைத்தார். தாசில்தார் அன்பழகன், செயல் அலுவலர் ஆறுமுகம், ஒன்றிய செயலர்கள் முத்துப்பெருமாள், கலையரசன், மனோகரன், முன்னாள் பேரூராட்சி தலைவர் முகமது யூனுஸ், நகர செயலர் முனவர் உசேன், ஒன்றிய வர்த்தக சங்க செயலர் சங்கர், நிர்வாகிகள், சக்திவேல், செழியன், நடராஜன், சரவணன், ராமர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X