பொது செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர்கள் சம்பளமின்றி அவதி

Added : செப் 13, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுார் ஆதி திராவிடர் நலப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இது வரை சம்பளம் வழங்காததால் அவதிப்பட்டு வருகின்றனர்.கடலுார் வட்டம், தனி தாசில்தார் (ஆதி திராவிடர் நலம்) கட்டுப்பாட்டில் பள்ளிகள், விடுதிகளில் பணி புரியும் ஆசிரியர்கள், வார்டன்கள், சமையலர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.இவர்களுக்கான ஆகஸ்ட் 2021க்கான மாத சம்பளத்தை இது வரை

கடலுார் : கடலுார் ஆதி திராவிடர் நலப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இது வரை சம்பளம் வழங்காததால் அவதிப்பட்டு வருகின்றனர்.

கடலுார் வட்டம், தனி தாசில்தார் (ஆதி திராவிடர் நலம்) கட்டுப்பாட்டில் பள்ளிகள், விடுதிகளில் பணி புரியும் ஆசிரியர்கள், வார்டன்கள், சமையலர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.இவர்களுக்கான ஆகஸ்ட் 2021க்கான மாத சம்பளத்தை இது வரை வழங்கவில்லை. தனி தாசில்தார் விடுமுறையில் சென்றதால் சம்பளம் வழங்க தாமதமாவதாக கூறப்படுகிறது. இதனால் 13 நாட்களை கடந்தும் ஊதியமின்றி தவித்து வருகின்றனர். பல மாதங்களாக இது போல தாமதமாகத் தான் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. உயரதிகாரிகள் தலையிட்டு உடனே ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X