பொது செய்தி

இந்தியா

புதுச்சேரி எழுத்தாளருக்கு திருப்பூர் இலக்கிய விருது

Added : செப் 13, 2021
Share
Advertisement
புதுச்சேரி : இளங்கோ அடிகள் அரசு மேல்நிலைப்பள்ளி துணை முதல்வர் பூபதி பெரியசாமியின் சிறுகதை நுால், திருப்பூர் இலக்கிய விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம், ஆண்டுதோறும் சர்வதேச அளவில் தமிழில் வெளியான சிறந்த புத்தகங்களைத் தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது.2021ம் ஆண்டின் விருதுக்கான நுால்கள் தேர்வு செய்யப்பட்டது.இதில், புதுச்சேரி
 புதுச்சேரி எழுத்தாளருக்கு திருப்பூர் இலக்கிய விருது

புதுச்சேரி : இளங்கோ அடிகள் அரசு மேல்நிலைப்பள்ளி துணை முதல்வர் பூபதி பெரியசாமியின் சிறுகதை நுால், திருப்பூர் இலக்கிய விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம், ஆண்டுதோறும் சர்வதேச அளவில் தமிழில் வெளியான சிறந்த புத்தகங்களைத் தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது.2021ம் ஆண்டின் விருதுக்கான நுால்கள் தேர்வு செய்யப்பட்டது.இதில், புதுச்சேரி இளங்கோ அடிகள் அரசு மேல் நிலைப் பள்ளி துணை முதல்வர் பூபதி பெரியசாமி எழுதிய 'ஈரம்' நுால் சிறுகதைப் பிரிவில், விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.திருப்பூர் இலக்கிய விருதுக்குத் தேர்வாகியுள்ள பூபதி பெரியசாமியை, அமைச்சர் நமச்சிவாயம், சபாநாயகர் செல்வம், செயின்ட் ஜோசப் அறக்கட்டளை தலைவர் ராமு பாலகிருஷ்ணன் ஆகியோர் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X