அரசு டாக்டர் மீது போலீசார் தாக்குதல்

Added : செப் 13, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரியில் அரசு டாக்டர் மற்றும் அவரது தந்தையை போலீசார் தாக்கியதால் பரபரப்பு நிலவியது.புதுச்சேரி ஈஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் துரை, 35; அரசு டாக்டர். இவரது தந்தை ரவி,64; பா.ஜ., பிரமுகர், மிஷன் வீதியில் பால் பூத் நடத்தி வருகிறார்.புதுச்சேரிக்கு துணை ஜனாதிபதி வருகையையொட்டி, ரவியின் கடையில் இருந்த குளிர்சாதன பெட்டியை அப்புறப்படுத்துமாறு போக்குவரத்து
 அரசு டாக்டர் மீது போலீசார் தாக்குதல்

புதுச்சேரி : புதுச்சேரியில் அரசு டாக்டர் மற்றும் அவரது தந்தையை போலீசார் தாக்கியதால் பரபரப்பு நிலவியது.புதுச்சேரி ஈஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் துரை, 35; அரசு டாக்டர். இவரது தந்தை ரவி,64; பா.ஜ., பிரமுகர், மிஷன் வீதியில் பால் பூத் நடத்தி வருகிறார்.

புதுச்சேரிக்கு துணை ஜனாதிபதி வருகையையொட்டி, ரவியின் கடையில் இருந்த குளிர்சாதன பெட்டியை அப்புறப்படுத்துமாறு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் மற்றும் போலீசார் எச்சரித்தனர்.அதே பகுதியில் சாலை யோரம் இருந்த தள்ளுவண்டி கடையை போலீசார் தள்ளிவிட்டு சென்றனர்.ரவியின் கடையில் குளிர்சாதன பெட்டி பெரியதாக இருந்ததால், அவரால் தள்ளி வைக்க முடியவில்லை. இதனால், அவருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.போலீசார் ரவியை தாக்கினர்.

அங்கு வந்த டாக்டர் துரையையும் தாக்கியதால், அவருக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது.தகவல் அறிந்த எம்.எல்.ஏ.,க்கள் ஜான்குமார், ரிச்சர்ட், ராமலிங்கம், கல்யாணசுந்தரம், சிவசங்கர், பிரகாஷ்குமார், உள்ளிட்டோர் குவிந்தனர்.பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணம் சம்பவ இடத்திற்கு வந்து டாக்டர் துரை மற்றும் அவரது தந்தையிடம் விபரங்களை கேட்டறிந்தார். பின் இருதரப்பினரிடமும் பேச்சுவார்தை நடத்தினார்.சம்பவம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்ததால் அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X