பொது செய்தி

இந்தியா

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் துணை ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கை

Added : செப் 13, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என, எதிர்க்கட்சி தலைவர் சிவா தலைமையில் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் துணை ஜனாதிபதியை சந்தித்து மனு அளித்தனர்.புதுச்சேரி வந்துள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை, எதிர்க்கட்சி தலைவர் சிவா தலைமையில் தி.மு.க., எம்.எல். ஏ.,க்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார் சந்தித்து மனு அளித்தனர்.மனு விபரம்;மறைந்த பிரதமர்

புதுச்சேரி : புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என, எதிர்க்கட்சி தலைவர் சிவா தலைமையில் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் துணை ஜனாதிபதியை சந்தித்து மனு அளித்தனர்.

புதுச்சேரி வந்துள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை, எதிர்க்கட்சி தலைவர் சிவா தலைமையில் தி.மு.க., எம்.எல். ஏ.,க்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார் சந்தித்து மனு அளித்தனர்.மனு விபரம்;மறைந்த பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியில், அப்போதைய மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க அறிக்கை அளித்தது.இதுவரை மாநில அந்தஸ்து வழங்கவில்லை. மாநில அந்தஸ்து புதுச்சேரி மக்களின் ஜனநாயக உரிமை. தாமத்திக்காமல் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்.கோவா தனி கணக்கை தொடங்கியபோது, மத்திய அரசிடம் இருந்த அனைத்து மரபு கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. புதுச்சேரி மாநிலம் கடந்த 2007ல் தனி கணக்கு தொடங்கிய போது, புதுச்சேரியின் அனைத்து மரபு கடன்களும் தள்ளுபடி செய்யப்படாமல், தொடர்கிறது.புதுச்சேரி மக்களுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதி சரி செய்யப்பட வேண்டும். மத்திய அரசிடம் உள்ள அனைத்து மரபு கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கு மாநில மக்கள் தங்களது விவசாய நிலங்களை வழங்கினர். ஆனால் அதில், புதிய படிப்புகளுக்கு 25 சதவீத இட ஒதுக்கீட்டை புதுச்சேரி மாணவர்களுக்கு தரவில்லை. தாங்கள், இவ்விஷயத்தில் தலையிட்டு சரிசெய்ய வேண்டும்.ஜிப்மரில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர்கள் உட்பட அனைத்து பிரிவிலும் 60 சதவீத வேலை வாய்ப்புகள் புதுச்சேரி மக்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.புதுச்சேரியில் சிறந்த மனித வளம் உள்ளது. தொழிற்சாலைகளை ஈர்க்க மத்திய அரசின் சிறப்புச் சலுகைகளுடன் கூடிய புதிய தொழில்துறை கொள்கையை புதுச்சேரிக்கு கொண்டு வர உதவ வேண்டும்.புதுச்சேரி மின் துறையை தனியார் மயமாக்குவதற்கான ஆயத்தப் பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இது புதுச்சேரி இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்பை இழக்க வழிவகுக்கும்; புதுச்சேரி அரசின் ஆட்சி அதிகாரத்தை குறைக்கும்.மின்துறை தனியார்மயமாக்கல் முயற்சியை கைவிட வேண்டும். புதுச்சேரி மக்களின் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கோரிக்கை விஷயங்களில் தலையிட்டு தீர்வு காண வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X