நலத்திட்ட உதவிகள் வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Added : செப் 13, 2021
Share
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் 38 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் பவன்குமார் ஜி கிரியப்பனவர், எம்.எல்.ஏ.க்கள் அய்யப்பன், வேல்முருகன், ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.அமைச்சர்கள் பன்னீர்செல்வம், கணேசன் ஆகியோர் கொரோனாவால் இறந்த துப்புரவு பணியாளர், பத்திரிகையாளர்
 நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் 38 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் பவன்குமார் ஜி கிரியப்பனவர், எம்.எல்.ஏ.க்கள் அய்யப்பன், வேல்முருகன், ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.அமைச்சர்கள் பன்னீர்செல்வம், கணேசன் ஆகியோர் கொரோனாவால் இறந்த துப்புரவு பணியாளர், பத்திரிகையாளர் குடும்பங்கள் 6 பேருக்கு தமிழக முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ. 35 லட்சம் நிதியுதவி வழங்கினர்.மேலும், 'உங்கள் தொகுதியில் முதல்வர்' என்ற திட்டத்தில் 32 பயனாளிகளுக்கு இலவச மனைப்பட்டா, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர். பின், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் என 11 பேருக்கு நல்லாசிரியர் விருதுகளையும் வழங்கினர். நிகழ்ச்சியில் எஸ்.பி., சக்தி கணேசன், முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X