தேசிய விஸ்வகர்மா விருது போட்டி எம்.ஐ.டி., கல்லுாரி 2ம் இடம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

தேசிய விஸ்வகர்மா விருது போட்டி எம்.ஐ.டி., கல்லுாரி 2ம் இடம்

Added : செப் 13, 2021
Share
புதுச்சேரி : ஏ.ஐ.சி.டி.இ., நடத்திய தேசிய அளவிலான சத்ரா விஸ்வகர்மா விருதுகளுக்கான போட்டியில் எம்.ஐ.டி., கல்லுாரி 2ம் இடம் பிடித்தது.அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) சார்பில், தனி மற்றும் நிறுவனங்கள், அமைப்புகள் கண்டுபிடிப்புகளை அங்கீகரிக்க சத்ரா விஸ்வ கர்மா விருது-2020 போட்டி, ஆன்லைன் வழியாக நடத்தப்பட்டது.38 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டனர். 3 கட்ட
 தேசிய விஸ்வகர்மா விருது போட்டி எம்.ஐ.டி., கல்லுாரி 2ம் இடம்

புதுச்சேரி : ஏ.ஐ.சி.டி.இ., நடத்திய தேசிய அளவிலான சத்ரா விஸ்வகர்மா விருதுகளுக்கான போட்டியில் எம்.ஐ.டி., கல்லுாரி 2ம் இடம் பிடித்தது.

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) சார்பில், தனி மற்றும் நிறுவனங்கள், அமைப்புகள் கண்டுபிடிப்புகளை அங்கீகரிக்க சத்ரா விஸ்வ கர்மா விருது-2020 போட்டி, ஆன்லைன் வழியாக நடத்தப்பட்டது.38 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டனர். 3 கட்ட மதிப்பீடுகளுக்கு பிறகு, 85 அணிகள் தேர்வு செய்யப்பட்டனர். இறுதியாக 8 பிரிவுகளில் வெவ்வேறு தலைப்புகளில் 24 குழுக்கள் தேர்வு செய்யப்பட்டது.இதில், 'வேலைக்கான நிபந்தனைகள்; தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு சவால்களை உறுதி செய்தல்' என்ற பிரிவில், மணக்குள விநாயகர் இன்ஸ்டியூட் ஆப் டெக்னா லஜி (எம்.ஐ.டி. கல்லுாரி), ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளர் வள்ளி, மாணவர்கள் மனோஜ்குமார், சீனு வாசன், சாந்தினிஸ்ரீ, லாவண்யா, கீர்த்தனா ஆகியோர் தயாரித்த, எம்கியூடிடி சர்வர் கிளையன்ட் மூலம் இயந்திர மயமாக்கப்பட்ட நரம்பு திரவ கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கை அமைப்பு திட்டம், 2வது இடத்திற்கு தேர்வாகியது. ரூ. 31 ஆயிரம் ரொக்க பரிசு வழங்கப்பட்டது.

போட்டியில் வெற்றி பெற்ற திட்ட வழிகாட்டி வள்ளி மற்றும் மாணவர்களை, மணக்குள விநாயகர் குழும தலைவர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன், கல்லுாரி முதல்வர் மலர்கண் ஆகியோர் பாராட்டி கவுரவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X