பொது செய்தி

இந்தியா

சிறந்த திரைப்படமாக தேன் தேர்வு

Added : செப் 13, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரி அரசின் 2020ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாக இயக்குனர் கணேஷ் விநாயகன் இயக்கிய தேன் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.புதுச்சேரி செய்தி மற்றும் விளம்பரத்துறை, நவதர்ஷன் திரைப்படக்கழகம் மத்திய அரசின் திரைப்பட இயக்குனரகத்துடன் இணைந்து புதுச்சேரியில் ஆண்டுதோறும் திரைப்பட விழா நடத்தி வருகிறது. இதில் சிறந்த திரைப்படம் தேர்வு செய்யப்பட்டு

புதுச்சேரி : புதுச்சேரி அரசின் 2020ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாக இயக்குனர் கணேஷ் விநாயகன் இயக்கிய தேன் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி செய்தி மற்றும் விளம்பரத்துறை, நவதர்ஷன் திரைப்படக்கழகம் மத்திய அரசின் திரைப்பட இயக்குனரகத்துடன் இணைந்து புதுச்சேரியில் ஆண்டுதோறும் திரைப்பட விழா நடத்தி வருகிறது. இதில் சிறந்த திரைப்படம் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்படுகிறது.புதுச்சேரி அரசின் 2020ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படங்கள் பரிசீலனை செய்யப்பட்டன.இறுதியில் இயக்குனர் கணேஷ் விநாயகன் இயக்கிய தேன் திரைப்படம் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்தாண்டுக்கான திரைப்பட விழா புதுச்சேரியில் வரும் 24 ம் தேதி தொடங்குகிறது. இவ்விழாவில், சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்ட தேன் திரைப்படத்தின் இயக்குனர் கணேஷ் விநாயகனுக்கு ரூ.1 லட்சமும், சங்கரதாஸ் சுவாமிகள் பெயரில் விருதும் முதல்வர் ரங்கசாமி வழங்க உள்ளார்.சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்ட தேன் திரைப்படம் மலைக்கிராம மக்களின் வாழ்வியல், அவர்களின் பிரச்னைகளை, துயரங்களை கதைக் களமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X