இந்தியா

இயற்பியல், வேதியியல் கேள்விகள் கடினம் 'நீட்' தேர்வு எழுதிய மாணவர்கள் கருத்து

Added : செப் 13, 2021
Share
Advertisement
புதுச்சேரி : இயற்பியல், வேதியியல் பாட பிரிவு கேள்விகள் விடையளிக்க கடினமாக இருந்ததாக நீட் தேர்வு எழுதிய பெரும்பாலான மாணவர்கள் கருத்து தெரிவித்தனர். புதுச்சேரியில் 7 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் நேற்று 'நீட்' தேர்வு எழுதினர்.புதுச்சேரி மையத்தில் தேர்வு எழுதிய திருப்பூர் மாணவர் டெலஸ் கூறுகையில், 'கடந்தாண்டு நீட் தேர்வினை எழுதினேன். அதிக மதிப்பெண் எடுக்க

புதுச்சேரி : இயற்பியல், வேதியியல் பாட பிரிவு கேள்விகள் விடையளிக்க கடினமாக இருந்ததாக நீட் தேர்வு எழுதிய பெரும்பாலான மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.

புதுச்சேரியில் 7 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் நேற்று 'நீட்' தேர்வு எழுதினர்.புதுச்சேரி மையத்தில் தேர்வு எழுதிய திருப்பூர் மாணவர் டெலஸ் கூறுகையில், 'கடந்தாண்டு நீட் தேர்வினை எழுதினேன். அதிக மதிப்பெண் எடுக்க முடியாததால் இரண்டாவது முறையாக எழுதினேன். தாவரவியல், விலங்கியலில் உள்ள 90 கேள்விகள் விடையளிக்க சுலபமாக இருந்தது. அதே வேளையில் இயற்பியல், வேதியியலில் தலா 20 கேள்விகள் எளிதாக விடையளிக்க முடிந்தது. 70 கேள்விகள் மிக கடினமாக இருந்தது' என்றார்.

முதல் முறையாக 'நீட்' தேர்வு எழுதிய மெட்ரிக் பள்ளி மாணவர்களும், தமிழ் மொழியில் 'நீட்' தேர்வினை எழுதிய மாணவர்களும், தாவரவியல், விலங்கியல் பாட பிரிவு கேள்விகள் எளிமையாக இருந்தன. இயற்பியல், வேதியியல் கேள்விகள் ஒட்டுமொத்தமாகவே கடினமாக இருந்ததாக கருத்து தெரிவித்தனர்.தமிழக பாடத்திட்டத்தின் கீழ் படித்த அரசு பள்ளி மாணவர்கள் கூறுகையில், 'நீட்' கேள்விகள் அனைத்துமே சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாகவே மாநில பாடவாரியத்தில் இருந்து 10 கேள்விகளுக்குத் தான் விடையளிக்க வாய்ப்பளிக்கப்பட்டது.

இது ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது. சி.பி.எஸ்.இ., மட்டுமின்றி, மாநில பாடத்திட்டத்தின் கீழ் 50 சதவீத கேள்விகள் கேட்க வேண்டும்' என்றனர்.நேரம் போதவில்லைஇயற்பியல், வேதியியலில் சமன்பாடுகளை புகுத்தி விடையளிக்குமாறு பல கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன. இந்த கேள்விகளுக்கு விடையளிக்க போதிய கால அவகாசம் இல்லை. குறிப்பாக இயற்பியல் கேள்விகளை சந்திக்க நேரம் போதவில்லை என பெரும்பாலான மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X