இந்தியா

பல்கலையில் சூரிய ஒளி மின் உற்பத்தி

Added : செப் 13, 2021
Share
Advertisement
புதுச்சேரி :புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 2.4 மெகாவாட் சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டத்தை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று திறந்து வைக்கிறார்.புதுச்சேரி, பல்கலைக்கழகம் கடந்த 1985ல் 780 ஏக்கர் பரப்பளவில் துவக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தில் 15 புலம்கள், 50 துறைகள், சிறப்பு ஆய்வகம், நுாலகம், நிர்வாகம், மாணவர்கள் தங்கும் விடுதிகள் உள்ளன.பல்கலைக்கழக கட்டடங்கள் மின்சார வசதியை
 பல்கலையில் சூரிய ஒளி மின் உற்பத்தி

புதுச்சேரி :புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 2.4 மெகாவாட் சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டத்தை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று திறந்து வைக்கிறார்.

புதுச்சேரி, பல்கலைக்கழகம் கடந்த 1985ல் 780 ஏக்கர் பரப்பளவில் துவக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தில் 15 புலம்கள், 50 துறைகள், சிறப்பு ஆய்வகம், நுாலகம், நிர்வாகம், மாணவர்கள் தங்கும் விடுதிகள் உள்ளன.பல்கலைக்கழக கட்டடங்கள் மின்சார வசதியை நம்பியுள்ளன. மாதத்திற்கு 75 லட்சம் ரூபாய் மின்சார தேவைக்காக பல்கலைக்கழகம் செலவு செய்து வருகிறது. மின்சார செலவுகளை குறைக்கும் வகையிலும், புதுப்பிக்கவல்ல எரிசக்திக்கு மாறும் வகையில் நிர்வாகம் எல்.இ.டி., விளக்குகள் பல இடங்களில் பொருத்தப்பட்டன.மத்திய அரசின் உத்தரவின்படி பல்கலைக் கழக கட்டடங்களில் தற்போது 2.4 மெகா வாட் மின்சாரத்தினை உற்பத்தி செய்யும் சூரிய ஒளி மின் உற்பத்தி பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதனை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று துவக்கி வைக்கிறார். விழாவில் கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, எம்.பி., வைத்தி லிங்கம், கோகுலகிருஷ்ணன், தொகுதி எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரம் கலந்து கொள்கின்றனர்.இதன் மூலம் பல லட்சம் ரூபாய் பல்கலைக்கழகத்திற்கு மிச்சமாவதுடன், ஆண்டிற்கு 2,900 டன் கார்பன் உமிழ்தலும் தடுக்கப்படும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X