ஜிப்மர் கேண்டீன் செயல்பாட்டிற்கு வருமா| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஜிப்மர் கேண்டீன் செயல்பாட்டிற்கு வருமா

Added : செப் 13, 2021
Share
புதுச்சேரி : ஜிப்மர் மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு அருகே இயங்கிய கேண்டீன் சீல் வைக்கப்பட்டதால், நோயாளிகளின் உறவினர்கள் உணவு வாங்க சிரமப்பட்டு வருகின்றனர்.புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவமனை, மத்திய அரசின் கீழ் இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனைக்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.இங்குள்ள கேண்டீன்களில் உணவு

புதுச்சேரி : ஜிப்மர் மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு அருகே இயங்கிய கேண்டீன் சீல் வைக்கப்பட்டதால், நோயாளிகளின் உறவினர்கள் உணவு வாங்க சிரமப்பட்டு வருகின்றனர்.

புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவமனை, மத்திய அரசின் கீழ் இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனைக்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.இங்குள்ள கேண்டீன்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆக.30ம் தேதி ஆய்வு செய்தனர். அவசர சிகிச்சை பிரிவு அருகே இயங்கி வந்த கேண்டீனில் தரமற்ற உணவு விற்பதாக 'சீல்' வைத்தனர்.அவசர சிகிச்சை பிரிவு அருகிலேயே கேண்டீன் இயங்கியது, டாக்டர்கள் மற்றும் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் உறவினர்களுக்கு பெரும் உதவியாக இருந்தது. டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள் அருகில் உள்ள இந்த கேண்டீனில் சாப்பிட்டு விட்டு வார்டுக்கு உடனடியாக திரும்பினர்.கேண்டீன் சீல் வைக்கப்பட்டதால் டாக்டர்கள், நோயாளிகளின் உறவினர்கள் உணவு வாங்க வெகுதுாரம் செல்ல வேண்டி உள்ளது. எனவே, ஜிப்மர் அவசர சிகிச்சை பிரிவு அருகே மீண்டும் கேண்டீனை திறந்து உணவு வகைகள் கிடைக்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X