பொது செய்தி

இந்தியா

100 பேருக்கு கொரோனா தொற்று

Added : செப் 13, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் நேற்று முன்தினம் 100 பேருக்கு தொற்று உறுதியானது. காரைக்காலில் 2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.மாநிலத்தில் நேற்று முன்தினம் 5,032 பேரை பரிசோதனை செய்ததில் 100 பேருக்கு தொற்று உறுதியானது. பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 24 ஆயிரத்து 775 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் 82 பேர் குணமடைந்தனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 22 ஆயிரத்து 22 ஆக

புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் நேற்று முன்தினம் 100 பேருக்கு தொற்று உறுதியானது. காரைக்காலில் 2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

மாநிலத்தில் நேற்று முன்தினம் 5,032 பேரை பரிசோதனை செய்ததில் 100 பேருக்கு தொற்று உறுதியானது. பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 24 ஆயிரத்து 775 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் 82 பேர் குணமடைந்தனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 22 ஆயிரத்து 22 ஆக உயர்ந்துள்ளது.மருத்துவமனைகளில் 178 பேர் சிகிச்சை பெறுகின்றனர். வீட்டு தனிமையில் 752 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாரைச் சேர்ந்த 77 மற்றும் 75 வயது முதியவர்கள் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இறப்பு எண்ணிக்கை 1,823 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் தொற்று 1.99 சதவீதமாக உள்ளது. இறப்பு சதவீதம் 1.46 ஆக உள்ளது. குணமடைந்தோர் சதவீதம் 97.79 ஆக உள்ளது. மாநிலத்தில் நேற்று முன்தினம் சுகாதாரத்துறையினர் 11 பேர், பொதுமக்கள் 1,813 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X