பொது செய்தி

இந்தியா

நியமன எம்.எல்.ஏ.,வுக்கு ஓட்டுரிமையா?

Added : செப் 13, 2021
Share
Advertisement
புதுச்சேரி : ராஜ்யசபா தேர்தலில் நியமன எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டளிக்கும் முயற்சியை தேர்தல் ஆணையம் முறியடிக்க வேண்டும் என இந்திய கம்யூ., வலியுறுத்தி உள்ளது.இந்திய கம்யூ., மாநிலச் செயலாளர் சலீம், இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:ஜனாதிபதி தேர்தல், மாநிலங்களவை தேர்தலில், புதுச்சேரியிலிருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள்

புதுச்சேரி : ராஜ்யசபா தேர்தலில் நியமன எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டளிக்கும் முயற்சியை தேர்தல் ஆணையம் முறியடிக்க வேண்டும் என இந்திய கம்யூ., வலியுறுத்தி உள்ளது.இந்திய கம்யூ., மாநிலச் செயலாளர் சலீம், இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

ஜனாதிபதி தேர்தல், மாநிலங்களவை தேர்தலில், புதுச்சேரியிலிருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே ஓட்டளித்தனர் என்பது வரலாறு.இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 54, ஜனாதிபதி, மாநில சட்டசபையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டும் என கூறுகிறது.இப்பிரிவிற்கான விளக்கத்தில், மாநிலம் என்பது டில்லி மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் உள்ளடங்கியது என்று கூறுகிறது. இதன்படி, புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.,க்களுக்கு ஜனாதிபதி தேர்தல், ராஜ்யசபா தேர்தலில் ஓட்டளிக்கும் உரிமை இல்லை.

ஆனால், மத்தியில் ஆளும் பா.ஜ. அரசு, தனது கட்சி பிரதிநிதியை மாநிலங்களவைக்கு, அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக, நியமன எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டின் மூலம் தேர்வு செய்திட முயற்சி செய்கிறது. எனவே, ஜனநாயகத்தின் நலன் கருதியும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாத்திடவும், புதுச்சேரியில் நடைபெறும் ராஜ்யசபா தேர்தலில் நியமன எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டளித்திட உரிமை அளிக்கும் எந்தவொரு முயற்சியையும் இந்திய தேர்தல் ஆணையம் முறியடிக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X