பொது செய்தி

இந்தியா

விநாயகர் சிலைகள் விஜர்சனம்

Added : செப் 13, 2021
Share
Advertisement
காரைக்கால் : காரைக்காலில் விநாயகர் சிலைகள் கடலில் விஜர்சனம் செய்யப்பட்டது.காரைக்காலில் இந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தியையொட்டி, ஏழை மாரியம்மன் கோவில், நேருநகர், மதகடி, தலத்தெரு, வலத்தெரு உள்ளிட்ட 50 இடங்களில் 10ம் தேதி விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.நேற்று விநாயகர் சிலைகள் கடலில் விஜர்சனம் செய்யப்பட்டது. இதற்காக மாவட்டம் முழுவதும் இருந்து

காரைக்கால் : காரைக்காலில் விநாயகர் சிலைகள் கடலில் விஜர்சனம் செய்யப்பட்டது.

காரைக்காலில் இந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தியையொட்டி, ஏழை மாரியம்மன் கோவில், நேருநகர், மதகடி, தலத்தெரு, வலத்தெரு உள்ளிட்ட 50 இடங்களில் 10ம் தேதி விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.நேற்று விநாயகர் சிலைகள் கடலில் விஜர்சனம் செய்யப்பட்டது. இதற்காக மாவட்டம் முழுவதும் இருந்து விநாயகர் சிலைகள் வாகனங்களில் ஏழை மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.விநாயகர் சிலை ஊர்வலம் அமைச்சர் சாய்சரவணன் குமார் தலைமையில் நடந்தது. ஊர்வலம் பாரதியார் வீதி, திருநள்ளார் சாலை, மாதாக்கோவில் வீதி, காமராஜர் வீதி வழியாக சென்று, கிளிஞ்சல்மேடு கடலில் படகு மூலம் சிலைகள் கொண்டு செல்லப்பட்டு, விஜர்சனம் செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X