பொது செய்தி

இந்தியா

புதுச்சேரியில் 15 மையங்களில் 7,123 மாணவர்கள் பங்கேற்பு

Added : செப் 13, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரியில் 15 மையங்களில் நடந்த 'நீட்' தேர்வில் 7 ஆயிரத்து 123 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.இளநிலை மருத்துவப்படிப்பில் சேர்வதற்கு 'நீட்'தேர்வு நேற்று நாடு முழுவதும் நடந்தது.புதுச்சேரியில் 15 மையங்களில் 7 ஆயிரத்து 123 மாணவர்கள் நேற்று நீட் தேர்வு எழுதினர். புதுச்சேரி மையத்தின் கீழ் புதுச்சேரி, கடலுார், விழுப்புரம் உள்ளிட்ட மாணவர்கள் தேர்வு எழுதினர்.நீட்
 புதுச்சேரியில் 15 மையங்களில் 7,123 மாணவர்கள் பங்கேற்பு

புதுச்சேரி : புதுச்சேரியில் 15 மையங்களில் நடந்த 'நீட்' தேர்வில் 7 ஆயிரத்து 123 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்

.இளநிலை மருத்துவப்படிப்பில் சேர்வதற்கு 'நீட்'தேர்வு நேற்று நாடு முழுவதும் நடந்தது.புதுச்சேரியில் 15 மையங்களில் 7 ஆயிரத்து 123 மாணவர்கள் நேற்று நீட் தேர்வு எழுதினர். புதுச்சேரி மையத்தின் கீழ் புதுச்சேரி, கடலுார், விழுப்புரம் உள்ளிட்ட மாணவர்கள் தேர்வு எழுதினர்.நீட் தேர்வுக்காக கடுமையான கட்டுப்பாடுகளுடன் மாணவ- - மாணவிகள் உடல் வெப்பநிலை, ஆக்சிஜன் அளவு பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

புதுச்சேரி பகுதியில் காலாப்பட்டு கேந்திர வித்யாலயா, விவேகானந்தா சி.பி.எஸ்.இ., மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி, எம்.டி.டி., கிரைஸ்ட் கல்லுாரி வாசவி பள்ளி உள்ளிட்ட பல்வேறு மையங்களில் கவர்னர் தமிழிசை நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களுக்கு பூ கொடுத்து தேர்வை சிறப்பாக எழுத வாழ்த்தினார்.பின்னர் கவர்னர் தமிழிசை பெற்றோர்கள் நின்றிருந்த இடத்திற்க சென்று அவர்களிடம் விசாரித்தார். அப்போது அவர்கள் மையத்தில் வெயிலில் நிற்பதாகவும் உட்காருவதற்கு வசதியில்லை எனவும், குடிநீர் வசதி கூட இல்லை என புகார் கூறினர்.உடனடியாக பள்ளி பொறுப்பாளரை அழைத்து பெற்றோருக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய கவர்னர் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X