பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: கொள்கைக்கு ஒண்ணு; கொள்ளைக்கு ஒண்ணு!

Updated : செப் 13, 2021 | Added : செப் 13, 2021 | கருத்துகள் (42)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:-வி.எஸ்.ராமு, செம்பட்டி, திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:ஊரில் உள்ள ஒரு சில வீடுகளை பார்த்து, 'பிழைக்க தெரிந்த குடும்பம்' என விமர்சனம் செய்வர். காரணம் என்னவென்றால், அந்த குடும்பத்தில் உள்ளோர் ஒவ்வொருவரும் வெவ்வேறு கட்சிகளில் உறுப்பினர்களாக இருப்பர்.எந்த


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:



-வி.எஸ்.ராமு, செம்பட்டி, திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:



latest tamil news


ஊரில் உள்ள ஒரு சில வீடுகளை பார்த்து, 'பிழைக்க தெரிந்த குடும்பம்' என விமர்சனம் செய்வர். காரணம் என்னவென்றால், அந்த குடும்பத்தில் உள்ளோர் ஒவ்வொருவரும் வெவ்வேறு கட்சிகளில் உறுப்பினர்களாக இருப்பர்.எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அந்த குடும்பம் பலன் அடையும். அவர்கள் வீட்டு அலமாரியில், பல்வேறு கட்சிகளின் கரைவேட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும்.

பிழைக்க தெரிந்த குடும்பம் போல, அரசியல்வாதிகள் சிலர், 'லெட்டர்பேடு' கட்சியில் பொறுப்பு வகித்தபடியே, இன்னொரு கட்சியின் மக்கள் பிரதிநிதியாகவும் இருக்கின்றனர். தேர்தல் காலத்தில் தமிழகத்தில் இருக்கும் உதிரி மற்றும் லெட்டர்பேடு கட்சிகள், தி.மு.க., அல்லது அ.தி.மு.க., உடன் கூட்டணி அமைத்து கொள்கின்றன.தங்கள் கட்சி சின்னத்தை புறக்கணித்து, 'உதயசூரியன்' சின்னம் அல்லது 'இரட்டை இலை' சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுகின்றனர்.அப்படி வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகள் இன்று புலம்புகின்றனர்.

'ஐயா... நான் அந்த கட்சியின் நிர்வாகியாக இருந்தேன்... தேர்தலின் போது இந்த கட்சியில் சேர்ந்து உறுப்பினர் அட்டை வைத்திருக்கிறேன்...' என்றெல்லாம் அறிக்கை வெளியிடுவதை பார்க்கும் போது வியப்பாகவும், வேடிக்கையாகவும் இருக்கிறது.


latest tamil news


வி.சி., பொதுச்செயலராக இருந்த ரவிகுமார், 2019 லோக்சபா தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் தி.மு.க.,வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றார்.இப்போது நீதிமன்றத்தில், 'நான் தி.மு.க., உறுப்பினர்; அதற்கான அடையாள அட்டையும் உள்ளது' என தெரிவித்து உள்ளார்.இவர் மட்டுமல்ல; பல்வேறு லெட்டர்பேடு கட்சி பொறுப்பாளர்களும், திராவிட கட்சிகளின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். அவர்கள் எல்லாம் பிழைக்கத் தெரிந்த அரசியல்வாதிகள்.பதவிக்கு ஆசைப்படும் அரசியல்வாதிகள், அனைத்து கட்சியிலும் சேர்ந்து உறுப்பினர் அட்டை வாங்கிக் கொள்ளலாம். 'ஆசைக்கு ஒரு குழந்தை; ஆஸ்திக்கு ஒரு குழந்தை' என்பது போல, கொள்கைக்கு ஒரு கட்சி; கொள்ளைக்கு ஒரு கட்சி என, பித்தலாட்ட அரசியல்வாதிகள், 'ஜோராக' வாழ்கின்றனர்!

Advertisement




வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
14-செப்-202107:23:49 IST Report Abuse
மதுரை விருமாண்டி ரொம்ப ஆராய்ந்தா நயினார் நாகேந்திரனை சுயேச்சைன்னு தான் கணக்கிலே சேர்க்கணும். ஆடீம்காலேருந்து பாஜாக்காக்கு தாவி, கட்சி அனுமதி எதுவும் தேவையில்லைன்னு அவராகவே தொகுதியை அறிவிச்சிக்கிட்டார். அப்புறம் தான் காவிக்கரை வேட்டி கட்டினார். தோத்தா கவர்னர் பதவி கிடைக்கும்ன்னு நின்னார். அவரோட துரதிருஷ்டம் ஜெயிச்சிட்டார். அண்ணாமலே இப்படியே மக்கள் பிரச்சினையைப பேசாம விநாயகர் ன்னு அலைஞ்சா நைனார் டீம்காவிலே ஐக்கியம் ஆயிடுவார். கொஞ்ச நாள்லே அதான் நடக்கப் போகுது.
Rate this:
Cancel
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
14-செப்-202100:07:37 IST Report Abuse
Anantharaman Srinivasan மாற்றுக்கட்சி சின்னத்தில் நிற்காமல் தேர்தல் நேரத்தில் முந்திக்கொண்டு ஒப்பந்தம் போட்டு ஓவ்வொரு தேர்தலுக்கும் மாறிமாறி அணிமாறி பெட்டியும் வாங்கி கொழிக்கும் தந்தையும் தனயனையும் நம்பி ஏமாந்து நிற்க்கும் கட்சிகாரங்களை எந்த லிஸ்டில் சேர்ப்பது ???
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
13-செப்-202119:25:52 IST Report Abuse
RajanRajan தமிழகத்தில் பெரும்பான்மையோர் நூதன திருட்டு வித்தைகாரங்களாகிட்டாங்க. அவனவன் காற்றுள்ளபோதே துற்றிக்கணும்னு தயிர் வடை பாணியில் களமிறங்கிட்டானுங்க. எங்கே பார்த்தாலும் அந்த கூர்வது முதலிகள் தான் போங்க. நம்ம உயிகாட்டுக்காரன் கலெக்சன் தடம் புரளுறதேன்னு உஷாராகி அவனோட நேரடி கண்காணிப்புக்கு களமிறங்கிட்டன். தாங்குமா தமிழகம் என்பது தான் கேள்வியே.
Rate this:
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
13-செப்-202119:41:24 IST Report Abuse
Dhurveshஇடப்படியார் நான்கு வருடமாக நீட் தேர்வை நிறுத்த எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கமாட்டாராம். அடுத்தவங்க மட்டும் ஆட்சிக்கு வந்த நூறு நாட்களில் எல்லாம் செய்துமுடிக்க வேண்டுமாம் . கொஞ்சமாவது மனசாட்சியோடு பேசுங்கள் எடப்பாடி அவர்களே. கருணாநிதி மற்றும் ஜெயா நடத்தாத நீட் தேர்வை அனுமதித்தது உங்களின் கையாலாகாத அரசுதான். நீங்கள் பேசுவதற்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை 3...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X