பயங்கரவாதிகள் அட்டூழியம் காஷ்மீரில் போலீஸ் அதிகாரி பலி| Dinamalar

பயங்கரவாதிகள் அட்டூழியம் காஷ்மீரில் போலீஸ் அதிகாரி பலி

Added : செப் 13, 2021
Share
ஜம்மு-ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் போலீஸ் அதிகாரி பலியானார். ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே, போலீஸ் எஸ்.ஐ., அர்ஷித் அஹமது நேற்று ரோந்து சென்றார். அப்போது பின் தொடர்ந்து வந்த பயங்கரவாதி, எஸ்.ஐ., மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். இதேபோல் ராஜவுரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள்

ஜம்மு-ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் போலீஸ் அதிகாரி பலியானார். ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே, போலீஸ் எஸ்.ஐ., அர்ஷித் அஹமது நேற்று ரோந்து சென்றார். அப்போது பின் தொடர்ந்து வந்த பயங்கரவாதி, எஸ்.ஐ., மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். இதேபோல் ராஜவுரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. பாதுகாப்பு படையினர் போலீசுடன் இணைந்து நேற்று தேடுதல் வேட்டை நடத்தினர். மஞ்சகோட் தோரி மால் வனப்பகுதியில் பயங்கரவாதிகளுடன் பல மணி நேரம் கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. ஆனால்உயிரிழப்புகள் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X