தீர்ப்பாயங்களுக்கு உறுப்பினர்கள் நியமனம் | Dinamalar

பொது செய்தி

இந்தியா

தீர்ப்பாயங்களுக்கு உறுப்பினர்கள் நியமனம்

Updated : செப் 13, 2021 | Added : செப் 13, 2021 | கருத்துகள் (3)
Share
புதுடில்லி-என்.சி.எல்,டி., எனப்படும் தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்துக்கும், ஐ.டி.ஏ.டி., எனப்படும் வருமான வரி மேல்முறையீடு தீர்ப்பாயத்துக்கும் 31 உறுப்பினர்களை மத்திய அரசு நியமித்துள்ளது.'பல்வேறு தீர்ப்பாயங்களில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகளை நிரப்பாமல், அவற்றை பயனற்றதாக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. 'உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புகளை மத்திய

புதுடில்லி-என்.சி.எல்,டி., எனப்படும் தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்துக்கும், ஐ.டி.ஏ.டி., எனப்படும் வருமான வரி மேல்முறையீடு தீர்ப்பாயத்துக்கும் 31 உறுப்பினர்களை மத்திய அரசு நியமித்துள்ளது.



latest tamil news



'பல்வேறு தீர்ப்பாயங்களில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகளை நிரப்பாமல், அவற்றை பயனற்றதாக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. 'உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புகளை மத்திய அரசு மதிப்பதில்லை' என, தலைமை நீதிபதி என்.வி.ரமணா சமீபத்தில் கூறியிருந்தார்.


latest tamil news


இந்நிலையில், என்.சி.எல்.டி., மற்றும் ஐ.டி.ஏ.டி.,க்கு உறுப்பினர்களை மத்திய அரசு நியமித்து உள்ளது.என்.சி.எல்.டி.,க்கு நீதித்துறை மற்றும் தொழில்நுட்பத்துறை உறுப்பினர்களாக 18 பேரும், ஐ.டி.ஏ.டி.,க்கு நீதித் துறை மற்றும் கணக்காளர் உறுப்பினர்களாக 13 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X