சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சந்தன மரம் வெட்டி கடத்தல் போலீசார் தீவிர விசாரணை

Added : செப் 13, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுாரில் அரசுக்கு சொந்தமான சந்தன மரத்தை வெட்டி கடத்திய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.கடலுார் மஞ்சக்குப்பம் பழைய பத்திரப் பதிவு அலுவலகம் நுழைவு வாயில் அருகில் அரசுக்கு சொந்தமான 2 சந்தன மரங்கள் உள்ளன. இதில், ஒரு மரம் மர்ம நபர்களால் நேற்று காலை வெட்டப்பட்டும், மற்றொரு மரம் வெட்டப்படாமலும் இருந்தது.இது குறித்து வி.ஓ.ஏ., ஜெயராமன் கடலுார் புதுநகர்
 சந்தன மரம் வெட்டி கடத்தல் போலீசார் தீவிர விசாரணை

கடலுார் : கடலுாரில் அரசுக்கு சொந்தமான சந்தன மரத்தை வெட்டி கடத்திய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலுார் மஞ்சக்குப்பம் பழைய பத்திரப் பதிவு அலுவலகம் நுழைவு வாயில் அருகில் அரசுக்கு சொந்தமான 2 சந்தன மரங்கள் உள்ளன. இதில், ஒரு மரம் மர்ம நபர்களால் நேற்று காலை வெட்டப்பட்டும், மற்றொரு மரம் வெட்டப்படாமலும் இருந்தது.இது குறித்து வி.ஓ.ஏ., ஜெயராமன் கடலுார் புதுநகர் போலீசிலும், வனத்துறை அலுவலகத்திலும் புகார் தெரிவித்தார். போலீசாரும், வனத்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

மரத்தின் அடிக்கட்டை, பக்கவாட்டு சிறு சிறு கிளைகள் வெட்டப்பட்டு கீழே கிடந்ததை கண்டு பறிமுதல் செய்து தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். 6 அடி நீளத்தில் ஓரிரு கிளைகளை மட்டுமே மர்ம நபர்களால் வெட்டி கடத்தப்பட்டதும் தெரிந்தது. புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து மரத்தை வெட்டிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X