சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மருத்துவமனை ஜன்னல் உடைப்பு: போலீஸ் விசாரணை

Added : செப் 13, 2021
Share
Advertisement
திண்டிவனம் : விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூர் அடுத்த எஸ்.கடூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானமணி, 47; இவரது நண்பர் ரவிச்சந்திரன், 50; இருவரும் நேற்று மதியம் 2:30 மணிக்கு பைக்கில் சென்றபோது கீழே விழுந்து காயமடைந்தனர்..இருவரும், சிகிச்சைக்காக ஒலக்கூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்றனர்.அங்கு பணியில் இருந்த டாக்டர் அமலா, கர்ப்பிணிக்கு மருத்துவம் பார்த்துக்

திண்டிவனம் : விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூர் அடுத்த எஸ்.கடூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானமணி, 47; இவரது நண்பர் ரவிச்சந்திரன், 50; இருவரும் நேற்று மதியம் 2:30 மணிக்கு பைக்கில் சென்றபோது கீழே விழுந்து காயமடைந்தனர்..
இருவரும், சிகிச்சைக்காக ஒலக்கூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்றனர்.அங்கு பணியில் இருந்த டாக்டர் அமலா, கர்ப்பிணிக்கு மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஞானமணி, ரவிச்சந்திரனிடம் வெளியே இருக்கும்படியும், முகக்கவசம் அணிந்து உள்ளே வரும் படியும் கூறினார்.இதனால் ஆத்திரமடைந்த இருவரும், முகக்கவசம் அணிந்தால் தான் மருத்துவம் பார்ப்பீர்களா எனக்கேட்டு, மருத்துவமனை கழிவறை ஜன்னலை கல்லால் தாக்கி உடைத்தனர். புகாரின் பேரில், ஒலக்கூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X