பொது செய்தி

தமிழ்நாடு

குட்கா கடத்தல் வழக்கில் இருவர் கைது

Added : செப் 13, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : உளுந்துார்பேட்டையில் குட்கா கடத்தலில் ஈடுபட்ட இருவர் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அண்ணாமலை நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெற்றிவேல், 42; இவர், கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி உளுந்துார்பேட்டையில் 720 கிலோ குட்காவை கடத்தினார். இதற்கு, கடலுார் மாவட்டம், மங்கலம்பேட்டையைச் சேர்ந்த முகமது இஸ்மாயில், 45; உடந்தையாக

கள்ளக்குறிச்சி : உளுந்துார்பேட்டையில் குட்கா கடத்தலில் ஈடுபட்ட இருவர் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அண்ணாமலை நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெற்றிவேல், 42; இவர், கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி உளுந்துார்பேட்டையில் 720 கிலோ குட்காவை கடத்தினார்.

இதற்கு, கடலுார் மாவட்டம், மங்கலம்பேட்டையைச் சேர்ந்த முகமது இஸ்மாயில், 45; உடந்தையாக செயல்பட்டார்.இருவரையும் உளுந்துார்பேட்டை போலீசார் கைது செய்து, செஞ்சி கிளைச் சிறையில் அடைத்தனர். இவர்களது தொடர் குற்ற செயல்களைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, இருவரையும் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்.பி., ஜியாவுல்ஹக் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில், இருவரையும் தடுப்புக் காவலில் கைது செய்ய கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டார்.இதனையடுத்து, உளுந்துார்பேட்டை போலீசார், செஞ்சி கிளைச் சிறையில் இருந்த வெற்றிவேல், முகமது இஸ்மாயில் ஆகியோரிடம் அதற்கான உத்தரவு நகலை வழங்கி, இருவரையும் கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X