பொது செய்தி

தமிழ்நாடு

தாய்க்கு 3 முறை கொரோனா தடுப்பூசி மகன் புகாரால் திண்டிவனத்தில் பரபரப்பு

Added : செப் 13, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
திண்டிவனம் : தனது தாய்க்கு மூன்றாவது முறையாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக அவரது மகன், கலெக்டரிடம் புகார் தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சி வளாகத்தில் நேற்று காலை கொரோனா தடுப்பூசி மெகா முகாம் நடந்தது. அப்போது, திண்டிவனம் அடுத்த விட்டலாபுரத்தைச் சேர்ந்த விவசாயி சிவக்குமார், 48, தனது தாய் கண்ணம்மாவுடன், 70, வந்து, அங்கிருந்த
 தாய்க்கு 3 முறை கொரோனா தடுப்பூசி மகன் புகாரால் திண்டிவனத்தில் பரபரப்பு

திண்டிவனம் : தனது தாய்க்கு மூன்றாவது முறையாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக அவரது மகன், கலெக்டரிடம் புகார் தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சி வளாகத்தில் நேற்று காலை கொரோனா தடுப்பூசி மெகா முகாம் நடந்தது. அப்போது, திண்டிவனம் அடுத்த விட்டலாபுரத்தைச் சேர்ந்த விவசாயி சிவக்குமார், 48, தனது தாய் கண்ணம்மாவுடன், 70, வந்து, அங்கிருந்த மருத்துவத்துறை ஊழியர்களிடம், 'தனது தாய்க்கு விட்டலாபுரத்தில் நேற்று காலை நடந்த சிறப்பு முகாமின்போது, மூன்றாவது முறையாக கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.

இதனால், அவரது உடல் நலத்திற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா' என, கேட்டார். அப்போது முகாமிற்கு வந்த கலெக்டர் மோகனிடமும் முறையிட்டார்.சிவக்குமார் கூறுகையில், 'ஏற்கனவே என்னுடைய தாயாருக்கு இரண்டு முறை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இரண்டாவது தடுப்பூசி கடந்த நான்கு நாட்களுக்கு முன் ஏரி பராமரிப்பு வேலையில்போது, சுகாதாரத்துறை சார்பில் போடப்பட்டது. நேற்று காலை நான் நிலத்திற்கு சென்றிருந்த நேரத்தில், என்னுடைய தாயாருக்கு உடல் நிலை சரியில்லாததால், பொது இலவச மருத்துவ முகாம் என நினைத்து விட்டலாபுரத்தில் நேற்று நடந்த கொரோனா தடுப்பூசி மெகா முகாமிற்கு சென்றுள்ளார்.

அங்கு பணியில் இருந்த ஊழியர்கள், ஏற்கனவே அவர் தடுப்பூசி போட்டுள்ளாரா என்ற விபரத்தைக் கேட்காமல், அவருக்கு மூன்றாவது முறையாக தடுப்பூசி போட்டுள்ளனர். இதுகுறித்து ஊசி போட்டவர்களிடம் கேட்டபோது, திண்டிவனத்திற்கு சென்று டாக்டரிடம் கேட்கும்படி கூறியதால் இங்கு வந்து புகார் தெரிவித்தேன். கலெக்டரிடம் கூறியபோது, மருத்துவரிடம் கூறும்படி தெரிவித்து சென்று விட்டார்.மருத்துவரிடம் கேட்டபோது, அவருடைய மொபைல் எண்ணைக் கொடுத்து, ஏதாவது பிரச்னை என்றால் போன் செய்யும்படி கூறியுள்ளார்' என்றார்.இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-செப்-202106:27:54 IST Report Abuse
அப்புசாமி யாராவது மழைக்கு ஆஸ்பத்திரி பக்கம் ஒதுங்கினாலும் தடுத்து தடுப்பூசி போட்டுருவாங்க போலிருக்கே... மூணாவது பூஸ்டர் தடுப்பூசி திட்டம் அமலுக்கு வந்திருச்சா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X