பொது செய்தி

தமிழ்நாடு

சட்டசபை கூட்டம் இன்று முடிவு 'நீட்' தேர்வுக்கு எதிராக மசோதா

Updated : செப் 13, 2021 | Added : செப் 13, 2021 | கருத்துகள் (40)
Share
Advertisement
சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்கு பின், இன்று சட்டசபை மீண்டும் கூடுகிறது. 'நீட்' தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறும் மசோதா நிறைவேற்றப்பட உள்ளது. கொரோனா பரவலைத் தொடர்ந்து, சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கின் மூன்றாவது தளத்தில் தற்காலிக சட்டசபை கூட்டம் நடந்து வருகிறது.ஆக., 13ல் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, துறை வாரியாக மானிய

சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்கு பின், இன்று சட்டசபை மீண்டும் கூடுகிறது. 'நீட்' தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறும் மசோதா நிறைவேற்றப்பட உள்ளது. கொரோனா பரவலைத் தொடர்ந்து, சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கின் மூன்றாவது தளத்தில் தற்காலிக சட்டசபை கூட்டம் நடந்து வருகிறது.



latest tamil news


ஆக., 13ல் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. 9ம் தேதி போலீஸ் மற்றும் தீயணைப்புத் துறைகள் மீதான விவாதம் நடந்தது. நீலகிரி மாவட்டம் கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம், மாநில சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் தொடர்பாக, முதல்வர் ஸ்டாலினுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, விநாயகர் சதுர்த்தியை ஒட்டி சட்டசபைக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.


latest tamil news


மூன்று நாட்கள் விடுமுறைக்கு பின், இன்று சட்டசபை கூடுகிறது. போலீஸ் மற்றும் தீயணைப்புத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்கு முதல்வர் பதிலுரை வழங்க உள்ளார்.போலீஸ் மற்றும் தீயணைப்புத் துறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு புதிய அறிவிப்புகளையும் வெளியிட உள்ளார். ஒரு மாதமாக நடந்த சட்டசபை கூட்டம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

அதனால், நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறும் வகையிலான சட்ட மசோதா இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. நீட் தேர்வுக்கு பயந்து, சேலத்தைச் சேர்ந்த மாணவன் தனுஷ் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக பிரச்னையை எழுப்ப, அ.தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முடிவெடுத்து உள்ளன. அதனால், இன்றைய கூட்டம் பரபரப்பு மிகுந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
13-செப்-202114:46:03 IST Report Abuse
வெகுளி தேர்வெழுத அஞ்சி நடுங்கும் சமசீர் மாணவ சமுதாயத்தை முன்னேற்ற கல்வித்துறை மத்திய அரசின் பொறுப்பிற்கு முழுமையாக மாற்றப்பட வேண்டும்....
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
13-செப்-202110:43:02 IST Report Abuse
 N.Purushothaman இப்போது தான் ஏழை மற்றும் நடுத்தர பெற்றோர்களுக்கு நீட் தேர்வு மூலம் தங்கள் பிள்ளைகளுக்கும் மருத்துவ படிப்பு படிக்க இடம் கிடைக்கும் என்கிற கனவு துளிர்விட்டு உள்ளது ....அது இவனுங்களுக்கு பொறுத்து கொள்ள முடியல போல ...
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
13-செப்-202110:40:32 IST Report Abuse
Pugazh V இங்கே திமுக அரசுக்கு எதிராக அவரவர் தரத்திற்கேற்ப அநாகரிகமான கருத்து எழுதுபவர்களே... நீட் தேர்வு நடத்தறது யார்? ஒன்றிய அரசு. அப்புறம் ஏன் மாநில அரசிடம் வந்து, ஏன் ரத்து பண்ணலை"என்று கேட்கிறீர்கள்?? அறிவற்ற தனமாக இருக்கிறதே. 2. உங்களுக்கு நீட் தேர்வு வேண்டுமா? அப்போ போய் எழுதுங்கள் உங்கள் பிள்ளைகளை எழுதச் சொல்லுங்கள். ஏன் ரத்து பண்ணலை, ஏன் ரத்து பண்ணலை என்று பாஜக விடம் கேளுங்கள்.
Rate this:
13-செப்-202112:04:05 IST Report Abuse
Vittalanandஅறிவு கொழு ந்தே. நீர் ரத்து செய்து சட்டம் போடுவேன் என்பது சுடலையின் வாக்குறுதி. உயது oc பிரியாணி அல்ல....
Rate this:
13-செப்-202112:34:51 IST Report Abuse
ஆரூர் ரங்நீட் தேர்வை நுழைந்தது திமுக. இப்போ விலக்க செல்லாத சட்டம்🤑 கொண்டு வருவதும் அதே கயவர்👹 கூட்டம். இதே வேலையைதான் மீத்தேன், ஜல்லிக்கட்டு எல்லாவற்றிலும் செய்தார்கள்....
Rate this:
13-செப்-202119:22:40 IST Report Abuse
சி ரதிநீட் தேர்வை ரத்து பண்ணுவோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தது திமுக தானே.திமுகவிடம் தான் ஏன் ரத்து செய்யவில்லை,முடியவில்லை என்றால் ராஜினாமா செய்யுங்க...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X