பரிசுப் பொருள் அனுப்புவதாக கூறி பெண்ணிடம் ரூ. 13.65 லட்சம் மோசடி 2 பேர் மீது வழக்கு பதிவு

Added : செப் 13, 2021
Share
Advertisement
புதுச்சேரி : விலை உயர்ந்த பரிசு பொருள் அனுப்புவதாக கூறி, ரூ. 13.65லட்சம் மோசடி செய்த இருவர் மீது சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி, ராகவேந்திரா நகரைச் சேர்ந்தவர் மனோகரன்; டைல்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி, 42; இவருக்கு பேஸ்புக் மூலம் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த எரிக் வால்கர் அறிமுகமானார்.தான் டாக்டர் என தெரிவித்து,

புதுச்சேரி : விலை உயர்ந்த பரிசு பொருள் அனுப்புவதாக கூறி, ரூ. 13.65லட்சம் மோசடி செய்த இருவர் மீது சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி, ராகவேந்திரா நகரைச் சேர்ந்தவர் மனோகரன்; டைல்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி, 42; இவருக்கு பேஸ்புக் மூலம் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த எரிக் வால்கர் அறிமுகமானார்.தான் டாக்டர் என தெரிவித்து, ஜெயந்தியுடன் பேசி எரிக் வால்கர் பழங்கி வந்துள்ளார். ஜெயந்தியின் மகளுக்கு பிறந்த நாள் என்பதால், எரிக் வால்கர் தங்க நகை உள்ளிட்ட விலை உயர்ந்த பரிசு பொருள் அனுப்பியுள்ளதாக கூறியுள்ளார். பரிசு பொருளை மொபைல்போனில் படம் பிடித்தும் அனுப்பி உள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 26ம் தேதி, டில்லி விமான நிலையத்திலிருந்து ஜெயந்திக்கு போன் வந்தது.அதில் பேசிய அங்கீதா என்ற பெண், தான் விமான நிலைய அதிகாரி என தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் இருந்து பார்சல் வந்துள்ளதாகவும், விலை உயர்ந்த பொருட்கள் இருப்பதால் அதற்கு அபராதம் செலுத்தினால் பொருளை விடுவிப்பதாக கூறியுள்ளார்.அபராத தொகை செலுத்துவதற்காக இந்திய வங்கி கணக்கு எண்ணையும் அனுப்பியுள்ளார். அங்கீதா கூறிய வங்கி கணக்கு எண்ணில் ஜெயந்தி ரூ.13.65 லட்சம் பணத்தை 4 தவணையாக செலுத்தி உள்ளார். ஆனால் பரிசு பொருள் விடுவிக்கப்படவில்லை

.இதனால் சந்தேகமடைந்த ஜெயந்தி விசாரித்தபோது, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்துள்ளார். ஜெயந்தி சைபர் க்ரைம் போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். எரிக்வால்கர் மற்றும் அங்கீதா மீது சைபர் க்ரைம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் சந்தோஷ், மோசடி வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X