பொது செய்தி

தமிழ்நாடு

ஊரணியும் போச்சு, பூங்கா என்ன ஆச்சு...

Added : செப் 13, 2021
Share
Advertisement
சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் பூங்காவாக மாற்றப்பட்ட ஊரணியில் தண்ணீரையும் காணோம், பூங்காவையும் காணோம் என சமூக ஆர்வலர்கள் புலம்புகின்றனர்.இப்பேரூராட்சியில் 10வது வார்டு பாரதிநகர் அருகே 3 ஏக்கரில் செங்குண்டு ஊரணி இருந்தது. அப்பகுதி நிலத்தடி நீர் ஆதாரமாகவும் கால்நடைகளுக்கு குடிநீர் ஆதாரமாகவும் விளங்கிய இந்த ஊரணியை சுற்றி குடியிருப்பு பெருகியது.ஊரணியை பூங்காவாக

சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் பூங்காவாக மாற்றப்பட்ட ஊரணியில் தண்ணீரையும் காணோம், பூங்காவையும் காணோம் என சமூக ஆர்வலர்கள் புலம்புகின்றனர்.

இப்பேரூராட்சியில் 10வது வார்டு பாரதிநகர் அருகே 3 ஏக்கரில் செங்குண்டு ஊரணி இருந்தது. அப்பகுதி நிலத்தடி நீர் ஆதாரமாகவும் கால்நடைகளுக்கு குடிநீர் ஆதாரமாகவும் விளங்கிய இந்த ஊரணியை சுற்றி குடியிருப்பு பெருகியது.ஊரணியை பூங்காவாக மாற்ற பேரூராட்சி நிர்வாகம் முயற்சித்தது. இதற்காக 35 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்தது. ஆனால் பூங்கா அமைப்பதாக சொல்லி ஊரணியில் இருந்த வண்டல் மண் வெளியேற்றப்பட்டது. ஊரணியில் தண்ணீர் தேங்காமல் போனது. ஊரணியை சுற்றிலும், நடுவிலும் அமைக்கப்பட்ட தடுப்புச் சுவர்கள் சில மாதங்களிலேயே இடிந்து விழுந்தது.

மேலும் ஊரணியை சுற்றி மக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள வசதியாக பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டது. மேடு பள்ளமாக கற்கள் பதிக்கப்பட்டதால் பல கற்கள் காணாமல் போன நிலையில் அதில் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. பூங்கா அமைக்கும் திட்டமே வீணாகி ஊரணியிலும் தண்ணீர் தேங்காத நிலை ஏற்பட்டுள்ளது.இந்த ஊரணிக்கு நான்கு திசைகளிலும் தண்ணீர் வரத்து உள்ளது. எனவே ஊரணியில் தண்ணீர் தேங்க வசதியாக வண்டல் மண்ணை நிரப்பி பொதுமக்கள் நடந்து செல்லும் பாதையை சீரமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X