தமிழ்நாடு

முகாம்களில் குறைந்த அளவுதடுப்பூசி மருந்து; ஆர்வத்துடன் வந்த பொதுமக்கள் அவதி

Added : செப் 13, 2021
Share
Advertisement
சிவகங்கை மாவட்டத்தில் 750 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.காலை 7:00 முதல் இரவு 7:00 மணி வரை தடுப்பூசி செலுத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. மக்கள் தடுப்பூசி செலுத்துவதற்காக குவிந்தனர்.காலை 10:00 மணிக்கு தடுப்பூசி முகாம்களில் அனைத்து தடுப்பூசி மருந்துகளும் காலியான நிலையில் பல மணி நேரம் மக்கள் முகாம்களில்

சிவகங்கை மாவட்டத்தில் 750 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.

காலை 7:00 முதல் இரவு 7:00 மணி வரை தடுப்பூசி செலுத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. மக்கள் தடுப்பூசி செலுத்துவதற்காக குவிந்தனர்.காலை 10:00 மணிக்கு தடுப்பூசி முகாம்களில் அனைத்து தடுப்பூசி மருந்துகளும் காலியான நிலையில் பல மணி நேரம் மக்கள் முகாம்களில் காத்திருந்தனர்.

நாட்டரசன்கோட்டையில் இரு முகாம்களில் 220 பேருக்கு மட்டுமே மருந்து இருந்தது.6 ஆயிரம் பேர் உள்ள இடத்தில் குறைந்த அளவே தடுப்பூசி போடப்பட்டதால் மக்கள் சுகாதாரத்துறையினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். தடுப்பூசி மருந்து வரும்என முகாம்களில் பல மணி நேரம் காத்திருந்து ஊசி மருந்து இல்லாததால் ஏமாற்றத்துடன் மக்கள் திரும்பினர்.

கண்ணப்பன், அ.தி.மு.க., நகர செயலாளர் கூறியதாவது: முகாம்களில் குறைந்த அளவுதடுப்பூசி மருந்து இருந்ததால் காலையில் 220 பேருக்கு மட்டுமே செலுத்தினர். மற்றவர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. முறையான ஏற்பாடு இல்லாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். மக்கள் ஆர்வத்துடன் வந்தும் தடுப்பூசி போட முடியவில்லை.

ராமகணேஷ், பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர்: மாவட்டத்தில் 3 ஆயிரம் டோஸ் இருப்பு இருந்தது. 40 ஆயிரம் டோஸ் வரவழைக்கப்பட்டிருந்தது. 68 ஆயிரம் பேருக்கு செலுத்த அரசு இலக்கு நிர்ணயம் செய்திருந்தது. 750 இடங்களில் ஒரு முகாமில் நுாறு பேர் வீதம் 75 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்திருந்தோம். போதுமான தடுப்பூசி மருந்து வராததால் காலையில் முகாம்களில் இருந்த தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டுவிட்டது.

அனைத்து இடங்களிலும் தட்டுப்பாடு ஏற்பட்டதால் மாலையில் முகாம்களில் தடுப்பூசி செலுத்த முடியவில்லை. தடுப்பூசி செலுத்த வந்த மக்களிடம் முகவரி, அலைபேசி எண் பெறப்பட்டுள்ளது. தடுப்பூசி மருந்து வந்தவுடன் அவர்களை அழைத்து தடுப்பூசி போடப்படும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X