பொது செய்தி

தமிழ்நாடு

குடிமராமத்து நிறுத்தத்தால் பாதிப்பு

Added : செப் 13, 2021
Share
Advertisement
சிவகங்கை : குடிமராமத்துப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் கிராமப்புற பாசன கண்மாய்கள் துார்வாரப்படாமல் பாதிக்கப்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டத்தில் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. வைகை பாசனம், பெரியாறு பாசனம். சிற்றாறுகளான உப்பாறு, பாம்பாறு, மணிமுத்தாறு, விருசுழியாறு, பாலாறு, தேனாறு, சருகனி ஆறு, நாட்டாறு சிற்றாறுகள் மூலமாக பாசன நிலங்கள் பயன் பெற்று வருகின்றன.அ.தி.மு.க.,

சிவகங்கை : குடிமராமத்துப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் கிராமப்புற பாசன கண்மாய்கள் துார்வாரப்படாமல் பாதிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. வைகை பாசனம், பெரியாறு பாசனம். சிற்றாறுகளான உப்பாறு, பாம்பாறு, மணிமுத்தாறு, விருசுழியாறு, பாலாறு, தேனாறு, சருகனி ஆறு, நாட்டாறு சிற்றாறுகள் மூலமாக பாசன நிலங்கள் பயன் பெற்று வருகின்றன.

அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் குடிமராமத்துப்பணிகள் செய்யப்பட்டு பெரும்பான்மையான கணமாய், ஊரணிகள் துார் வாரப்பட்டன. தொடர்ந்து வரத்துக்கால்வாய்கள் உட்பட அனைத்தும் துார் வாரப்பட்டதால் மழைக்காலங்களில் கிடைத்த நீர் பாசன கண்மாய், குளங்களுக்கு எளிதில் செல்ல வாய்ப்பு ஏற்பட்டது.

தற்போதைய அரசு குடிமராமத்துப்பணிகளை நிறுத்தி விட்டது.மாவட்டத்தில் 12 ஒன்றியங்களில் 445 ஊராட்சிகளில் 4323 பாசன கண்மாய்கள், 4598 ஊரணிகள் அனைத்தும் சங்கிலி தொடர்போல் அமைந்துள்ளன. ஒரு கிராம ஊராட்சியில்குறைந்தபட்சம் கண்மாய், ஊரணிகள் 20க்கும் மேல் உள்ளது.

பல இடங்களில் வரத்துக்கால்வாய்கள் ஆக்கிரமிப்பு, மற்றும் மணல் மேவி நீர் வரத்துஇல்லாமல் பாசன கண்மாய்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் கிடைக்கும் நீரை சேமிக்க முடியாமல் வீணாகி வருகிறது.பெரும்பான்மையான ஊராட்சித்தலைவர்களும் தங்கள் பகுதிகளில் உள்ள கண்மாய் குளங்கள் இயந்திரங்கள் மூலம் துார் வாரிட வேண்டும், என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X