பொது செய்தி

இந்தியா

74 கோடி 'டோஸ்' தடுப்பூசி; மத்திய அரசு அபாரம்

Updated : செப் 13, 2021 | Added : செப் 13, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி-நாடு முழுதும் நேற்று இரவு வரை, 74.32 கோடிக்கும் அதிகமான 'டோஸ்' கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. சிக்கிம், கோவா, ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட ஏழு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:நேற்று இரவு 8:00 மணி நிலவரப்படி, நேற்று மட்டும் 50

புதுடில்லி-நாடு முழுதும் நேற்று இரவு வரை, 74.32 கோடிக்கும் அதிகமான 'டோஸ்' கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. சிக்கிம், கோவா, ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட ஏழு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.latest tamil news


மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:நேற்று இரவு 8:00 மணி நிலவரப்படி, நேற்று மட்டும் 50 லட்சத்து 25 ஆயிரத்து 159 'டோஸ்' தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதன் வாயிலாக இதுவரை நாடு முழுதும் போடப்பட்ட தடுப்பூசி டோஸ் எண்ணிக்கை, 74.32 கோடியை கடந்தது.

கோவா, ஹிமாச்சல பிரதேசம், சிக்கிம், லடாக், லட்சதீவு, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.


latest tamil news


இந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 100 சதவீத மக்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த மகத்தான பணியை வெற்றிகரமாக செய்து முடித்த சுகாதார பணியாளர்களுக்குபாராட்டுக்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dees - Chennai,இந்தியா
13-செப்-202118:04:46 IST Report Abuse
Dees இப்ப பெருமை அடிச்சி என்ன பிரயோஜனம் , தடுப்பூசிகளின் விலையில செஞ்ச பொலிடிக்ஸ்ல கரடியே காறித்துப்பிடிச்சி, மணிலா அரசுகள் நேரடியா இறக்குமதி ரேட் பேசப்போய்த்தானே, நாங்களே குடுக்குறோம்னு இறங்கிவந்தாங்க இல்லேன்னா நல்ல காசு பார்த்துஇருப்பார்கள்
Rate this:
Cancel
PKN - Chennai,இந்தியா
13-செப்-202114:50:52 IST Report Abuse
PKN வேகம் எடுத்திருக்கிறது ஆனா மொத்தம் கிட்டதட்ட 200 கோடி டோஸ் போட பட வேண்டும்.
Rate this:
Cancel
Sundaresan Palamadai Krishnan - Chennai,இந்தியா
13-செப்-202112:54:45 IST Report Abuse
Sundaresan Palamadai Krishnan மத்திய அரசின் இணையதளத்தில் தமிழ் நாட்டில் நேற்று செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 212718 என்று கொடுக்கப்பட்டுள்ளது . ஆனால் மாநில அரசின் கணக்கின்படி எண்ணிக்கை 28 லட்சம் என்று சொல்லப்பட்டுள்ளது
Rate this:
SureshKumar Dakshinamurthy - Chennai,இந்தியா
13-செப்-202115:18:35 IST Report Abuse
SureshKumar Dakshinamurthyமத்திய அரசு "கோவின்" செயலி அடிப்படையில் மிக சரியான எண்ணிக்கையினை கொடுக்கிறது. மாநில அரசு குருட்டாம் போக்கில் ஒரு எண்ணிக்கையினை கொடுக்கிறது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X