பொது செய்தி

தமிழ்நாடு

யோசிக்க வைத்த கேள்விகள்; புது பிரிவால் தடுமாற்றம்: மனம் திறந்த நீட் தேர்வு மாணவர்கள்

Added : செப் 13, 2021
Share
Advertisement
விருதுநகர் : கொரோனா தொற்று அச்சம், 'நீட் தேர்வில் விலக்கு பெற்றே தீருவோம்' என கடைசி வரை அரசியல் கள செய்திகளால் ஏற்பட்ட குழப்பம், பிளஸ் 2வில் 45 நாட்களே நேரடி வகுப்புகளில் பங்கேற்ற சோகம் போன்ற பல சவால்களையும் தாண்டி நேற்று நடந்த 'நீட்' நுழைவு தேர்வில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.இத்தேர்வில் இயற்பியல், வேதியியல் பகுதிகளில் தலா 45 வினாக்கள். உயிரியலில் 90 என 180
 யோசிக்க வைத்த கேள்விகள்; புது பிரிவால் தடுமாற்றம்:  மனம் திறந்த நீட் தேர்வு மாணவர்கள்

விருதுநகர் : கொரோனா தொற்று அச்சம், 'நீட் தேர்வில் விலக்கு பெற்றே தீருவோம்' என கடைசி வரை அரசியல் கள செய்திகளால் ஏற்பட்ட குழப்பம், பிளஸ் 2வில் 45 நாட்களே நேரடி வகுப்புகளில் பங்கேற்ற சோகம் போன்ற பல சவால்களையும் தாண்டி நேற்று நடந்த 'நீட்' நுழைவு தேர்வில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

இத்தேர்வில் இயற்பியல், வேதியியல் பகுதிகளில் தலா 45 வினாக்கள். உயிரியலில் 90 என 180 வினாக்களுக்கு விடையளித்தனர். ஒரு வினாவிற்கு நான்கு மதிப்பெண் வீதம் 720 மதிப்பெண்ணிற்கு தேர்வு எழுதினர் (தவறான வினாவிற்கு மைனஸ் 1 மதிப்பெண்). குறிப்பாக இயற்பியல் பகுதியில் இடம் பெற்ற 45 வினாக்கள் பெரும் சோதனையாக அமைந்ததாக மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.


புது பிரிவால் நேரம் போதவில்லை


எஸ்.ஹரிஷ், ராஜபாளையம்: இயற்பியல் கேள்விகள் கடினமாக இருந்தன. வழக்கத்திற்கு மாறாக உயிரியல், வேதியியல் எளிதாக இருந்தன. இந்த முறை பிரிவு 'பி' புதிதாக சேர்க்கப்பட்டிருந்தது. இதில் 15 கேள்விகள் கொடுக்கப்பட்டு 10 கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும். புதிய பிரிவால் ஏற்பட்ட தடுமாற்றத்தால் நேரம் போதவில்லை.


படித்ததால் எளிதாக இருந்தது


ஏ.அர்ச்சனா, சிவகாசி: தேர்விற்கு நன்கு தயாராகி இருந்தேன். அதனால் தேர்வு எளிதாக இருந்தது. இயற்பியல், வேதியியல் பாடங்களை விட உயிரியல் பாடத்தில் நன்கு கவனம் செலுத்தி படித்திருந்தேன். இதனால் எனக்கு உயிரியல் பிரிவில் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் என நம்புகிறேன். நன்கு படித்து சென்றால் எந்த தேர்வும் எளிதாக இருக்கும்.


நேரம் போதவில்லை


வி.பிரேம்குமார், ராஜபாளையம்: இரண்டாம் முறையாக நீட் தேர்வு எழுதுகிறேன். இந்த முறை 200 கேள்விகள் வழங்கப்பட்டு 180 கேள்விகளுக்கு பதில் அளிக்க கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. இயற்பியல் கேள்விகள் மிகவும் கடினமாக இருந்தன. வேதியியல், உயிரியல் கேள்விகள் எளிமையாக இருந்தது. கேள்விகளைத் தேர்ந்தெடுத்து எழுதும்போது நேரம் பற்றாக்குறையாக இருந்தது.


அனைத்து கேள்விகளும் எளிது


டி.கே.பிரவின்காந்த், சாத்துார்: சி.பி.எஸ்.இ., முறையில் கல்வி கற்றவர்களுக்குதான் நீட் தேர்வு எளிமையாக இருக்கும் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் அப்படி இல்லை. நான் மாநில கல்வி முறையில் படித்து தேர்வு எழுதியுள்ளேன். தேர்வில் அனைத்து வினாக்களும் எளிமையாகவே இருந்தன. 180 கேள்விகளுக்கும் விடை எழுதி உள்ளேன்.


எதிர்பார்ப்புடன் எழுதியிருக்கிறேன்


விக்னேஷ்வரன், சிவகாசி: கேள்விகள் இயற்பியலில் சுலபமாகவும், வேதியல், உயிரியலில் சற்று கடினமாகவும் இருந்தது. கொரேனா காலகட்டத்தில் நேரடி வகுப்புகள் இல்லாது ஆன்லைன் கோச்சிங் எடுத்து வந்தது முழு அளவில் தன்னம்பிக்கையை தரவில்லை. இருப்பினும் தேர்வை நம்பிக்கையாக எதிர்கொண்டிருக்கிறேன்.


நினைத்ததை விட கடினம்


அக்சரா, விருதுநகர்: 10ம் வகுப்பை முடித்ததுமே பள்ளி மூலம் தொடர்ந்து பயிற்சி வகுப்பு படித்து வந்தேன். தேர்வின் முன்னேற்பாடு சோதனைகள் தேர்வின் முக்கியத்துவத்தை பிரதிபலித்தது. நினைத்ததை விட வினாக்கள் கடினமாகவே அமைந்திருந்தது. முதல் முறை நீட் தேர்வை 50 கி.மீ தொலைவில் இருந்து வந்து புதிய சூழலில் எழுதியதும் வித்தியாசமான அனுபவம்.


யோசிக்க வைக்கும் கேள்விகள்


தேவி நாகதர்ஷினி, அருப்புக்கோட்டை: கேள்விகள் யோசித்து எழுத வேண்டி இருந்தது. பாடங்களில் இருந்து சேள்விகள் கேட்கப்படவில்லை. நேரடியாகவும் கேள்விகள் கேட்கப்படவில்லை. நீண்ட நேரம் எழுதுவது போல் இருந்தது. இயற்பியலில் கேள்விகள் கடினமாக இருந்தது. பிரிவு 'பி' பகுதி அதிக நேரம் பிடித்தது. மொத்தத்தில் தேர்வு கஷ்டமாக இருந்தது.


இயற்பியல் சற்று கடினம்


ஆர்.துர்கா தேவி, சிவகாசி: 2020ஐ விட இந்த முறை நீட்தேர்வு எளிதாக தான் இருந்தது. உயிரியல் பாடத்தை பொறுத்தவரை சி.பி.எஸ்.இ.,ன் என்.சி.ஆர்.டி., புத்தகத்திலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. ஆனால் இயற்பியல், சாய்ஸில் இருந்தது கேட்கப்பட்ட கேள்விகளும் கடினமான கேள்விகள் தான்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X