பொது செய்தி

தமிழ்நாடு

பழங்கால ஈமச்சின்னமான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

Added : செப் 13, 2021
Share
Advertisement
அருப்புக்கோட்டை : சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே நத்தபுரக்கி கிராமத்தில் ஈமச்சின்னங்களான முதுமக்கள் தாழிக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.அருப்புக்கோட்டையை சேர்ந்த பாண்டியநாட்டு பண்பாட்டு மைய வரலாற்று ஆய்வாளர் ஸ்ரீதர், ஆய்வு மாணவர்கள் கொன்னங்குளம் மீனாட்சிசுந்தரம், உசிலங்குளம் தாமரை கண்ணன் ஆகியோர்க்கு, மானாமதுரை அருகே நத்தபுரக்கி கிராமத்தில் பண்டைய கால

அருப்புக்கோட்டை : சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே நத்தபுரக்கி கிராமத்தில் ஈமச்சின்னங்களான முதுமக்கள் தாழிக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அருப்புக்கோட்டையை சேர்ந்த பாண்டியநாட்டு பண்பாட்டு மைய வரலாற்று ஆய்வாளர் ஸ்ரீதர், ஆய்வு மாணவர்கள் கொன்னங்குளம் மீனாட்சிசுந்தரம், உசிலங்குளம் தாமரை கண்ணன் ஆகியோர்க்கு, மானாமதுரை அருகே நத்தபுரக்கி கிராமத்தில் பண்டைய கால ஈமச்சின்னங்களான முதுமக்கள் தாழி, 30க்கும் மேற்பட்ட பழமையான கல்வெட்டுகள் இருப்பதாக, அவ்வூரை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவர் தருணேஷ்வரன் தகவல் கூறினார்.

இதையடுத்து அங்கு சென்று ஆய்வு செய்த பின் வரலாற்று ஆய்வாளர் ஸ்ரீதர் கூறியதாவது: இப்பகுதியில் சிதிலமடைந்த நிலையில் செம்பூரன் கற்களை கொண்டு வட்டவடிவில் அடுக்கப்பட்ட பழங்கால ஈமச்சின்னங்கள் அதிக அளவில் உள்ளன. இந்த கவ்வெட்டு தொகுப்பை சுற்றிலும் பெரிய ஈம தாழிகளின் கனம் மிக்க அடிப்பாகங்கள், கருப்பு, சிவப்பு நிற பானை ஓடுகள், மெல்லிய பானை ஓடுகள் என பலவகையான பானை ஓடுகள் மேற்பரப்பில் மண்ணில் புதைந்த நிலையில் உள்ளன.

இங்கு காணப்படும் முதுமக்கள் தாழிகள் அனைத்தும் இரட்டை தாழிகளாக உள்ளது. ஒரு தாழிக்குள், இன்னொரு தாழி இருப்பது மிகவும் அபூர்வமான ஒன்று. தாழிகளின் கழுத்து பகுதியில் அழகான வேலைபாடுகள் உள்ளன. தமிழகத்தில் பழங்காலத்தில் ஒருவர் இறந்தபின் அவரது உடலை அல்லது எலும்புகளை அவர் பயன்படுத்திய பொருட்களுடன், ஒரு தாழியில் வைத்து புதைத்து, அதனை சுற்றி கல் வட்டங்களை எழுப்புவது வழக்கமாக இருந்துள்ளது. இந்த கல்வட்டங்கள் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை மிக்க இரும்பு கற்காலத்தை சேர்ந்தவையாக இருக்கலாம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X