பயன்பாட்டிற்கு வராத சமுதாய கூடம், சுகாதார வளாகம்: அவதியில் நாராயணமடம் பகுதி மக்கள்

Added : செப் 13, 2021
Share
Advertisement
விருதுநகர் : மூடியே கிடக்கும் சமுதாய கூடம், தேங்கும் சாக்கடை கழிவுகள், செயல்படாத சுகாதார வளாகம் என பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர் நாராயண மடம் பகுதி மக்கள். இங்குள்ள சமுதாய கூடம் எட்டு ஆண்டுகளாக மூடியே உள்ளது. நகராட்சி அலுவலகம் புதுப்பித்தல் பணி நடந்த போது அங்குள்ள பொருட்களை இந்த சமுதாய கூடத்தில் போட்டு வைத்தனர். அப்போதிருந்தே சமுதாய கூடம் மூடியே உள்ளது. பணிகள்

விருதுநகர் : மூடியே கிடக்கும் சமுதாய கூடம், தேங்கும் சாக்கடை கழிவுகள், செயல்படாத சுகாதார வளாகம் என பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர் நாராயண மடம் பகுதி மக்கள். இ

ங்குள்ள சமுதாய கூடம் எட்டு ஆண்டுகளாக மூடியே உள்ளது. நகராட்சி அலுவலகம் புதுப்பித்தல் பணி நடந்த போது அங்குள்ள பொருட்களை இந்த சமுதாய கூடத்தில் போட்டு வைத்தனர். அப்போதிருந்தே சமுதாய கூடம் மூடியே உள்ளது. பணிகள் முடிந்தும் தற்போது வரை திறக்கவில்லை. தற்போது ஓட்டுப்பதிவு இயந்திரங்களை வைத்துள்ளனர்.

குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பழைய அருப்புகோட்டை ரோட்டில் உள்ள நீர்வரத்து கால்வாய் வழியாக செல்கிறது. இதில் மண் மேவி விட்டதால் மழை காலங்களில் நீர் வெளியேறுவதில் தடை ஏற்பட்டு சுகாதார கேடு ஏற்படுகிறது.10 லட்சம் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி கட்டுவதற்காக இங்கிருந்த சிறுவர் பூங்காவை அகற்றி 10 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இன்னும் தொட்டி கட்டப்படவில்லை.

அருப்புக்கோட்டை ரோடு பாலத்தின் சர்விஸ் ரோட்டில் பிளேவர் பிளாக் கற்கள் பெயர்ந்து காணப்படுகின்றன. பாலத்தின் கீழ் குப்பை கொட்டி எரிக்கப்படுகிறது. சுகாதார வளாகம் செயல்படாததால் இந்த ரோடு திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தப்படுகிறது.

செயல்படாத சுகாதார வளாகம்

ஆண்கள் சுகாதார வளாகத்திற்கு ஆழ்துளை கிணறு மூலம் நீர் எடுத்து பயன்படுத்தப்பட்டது. மோட்டார் பழுதால் சுகாதார வளாகம் முடங்கி போனது. ஆண்கள் சுகாதார வளாகத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.குமார், கட்டட தொழிலாளி.சமுதாய கூடத்தை செயல்படுத்துங்க இங்குள்ள சமுதாயக் கூடம் மக்கள் பயன்பாட்டிற்கு இன்றி பல ஆண்டுகளாக மூடி வைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள ஓட்டுப்பதிவு இயந்திரங்களை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு கிட்டங்கியில் வைக்க வேண்டும்.

மூர்த்தி, தனியார் நிறுவன ஊழியர்.

பாழாகும் அரசு கட்டிடம்

நீதிபதிகள் தங்குவதற்காக கட்டப்பட்ட இரண்டு கட்டடங்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தப்படாமல் உள்ளது. பாழாகிக் கொண்டிருக்கும் அந்த கட்டடத்தில் நுாலகம் அமைத்தால் அனைவருக்கும் பயன் உள்ளதாய் அமையும்.ரோகிணி, குடும்பதலைவி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X