தமிழ்நாடு

அடுத்த வாரமும் சிறப்பு தடுப்பூசி முகாம்

Added : செப் 13, 2021
Share
Advertisement
அவனியாபுரம் : ''மத்திய அரசிடம்இருந்து கூடுதல் கொரோனா தடுப்பூசி பெற்று சிறப்பு முகாமை அடுத்த வாரம் நடத்துவோம்,'' என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.மதுரை விமானநிலையத்தில் அவர் கூறியதாவது:தமிழகத்தில் 40 ஆயிரம் மையங்களில் 20 லட்சம் மக்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற இலக்கோடு தொடங்கப்பட்டது. 26 லட்சத்து 11ஆயிரம் என்ற இலக்கை

அவனியாபுரம் : ''மத்திய அரசிடம்இருந்து கூடுதல் கொரோனா தடுப்பூசி பெற்று சிறப்பு முகாமை அடுத்த வாரம் நடத்துவோம்,'' என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மதுரை விமானநிலையத்தில் அவர் கூறியதாவது:தமிழகத்தில் 40 ஆயிரம் மையங்களில் 20 லட்சம் மக்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற இலக்கோடு தொடங்கப்பட்டது. 26 லட்சத்து 11ஆயிரம் என்ற இலக்கை அடைந்துள்ளது. இந்தியாவில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம்களில் இதுதான் மிகவும் மிகப்பெரிய அளவிலான பயனாளிகளை கொண்டது.

தமிழகத்தில் நேற்று முன்தினம் வரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 3 கோடியே 74 லட்சத்து 8 ஆயிரத்து 980 ஆகும். 18 வயதை கடந்தவர்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டியவர்கள் 6 கோடியே 6 லட்சம் பேர். அதில் இதுவரை 4 கோடியே ஒரு லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் 754 மாவட்டங்கள் உள்ளன. அதில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்ட மாவட்டம் உதகை என்ற வகையில் முதலிடம் பிடித்துள்ளது. உதகை மாவட்டத்தில் 5 லட்சத்து 14 ஆயிரம் பேர் 18 வயதை தாண்டியதடுப்பூசி செலுத்த தகுதியானவர்கள். அனைவருக்கும் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது.

மத்திய அரசு அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து கூடுதல் தடுப்பூசிகளை தமிழகத்திற்கு பெற்று இதுபோன்ற ஒரு மெகா தடுப்பூசி முகாமை அடுத்தவாரம் நடத்துவோம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X