பொது செய்தி

தமிழ்நாடு

குன்றத்தில் உயிர் உரங்கள் தயாரிப்பு

Added : செப் 13, 2021
Share
Advertisement
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றத்தில் தோட்டக்கலை துறை பாரம்பரிய மலர்கள் மகத்துவ மையத்தில் உயிர் உரங்கள் தயாரிக்க உயிர் கட்டுப்பாட்டு ஆய்வகம் நிறுவப்பட்டு பணிகள் துவங்கியுள்ளன.இங்கு ஏற்கனவே மல்லிகை, தக்காளி, மிளகாய், கத்திரி நாற்றுகள் உற்பத்தி செய்து மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. தவிர பூ வகைகள் முன்மாதிரி திடல்களும் அமைத்து மகசூல்

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றத்தில் தோட்டக்கலை துறை பாரம்பரிய மலர்கள் மகத்துவ மையத்தில் உயிர் உரங்கள் தயாரிக்க உயிர் கட்டுப்பாட்டு ஆய்வகம் நிறுவப்பட்டு பணிகள் துவங்கியுள்ளன.

இங்கு ஏற்கனவே மல்லிகை, தக்காளி, மிளகாய், கத்திரி நாற்றுகள் உற்பத்தி செய்து மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. தவிர பூ வகைகள் முன்மாதிரி திடல்களும் அமைத்து மகசூல் அதிகரிக்க விவசாயிகளுக்கு ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, ட்ரைகோடர்மா விரிடி, பேசிலஸ் சப்டிலிஸ் தயாரிக்கப்படுகிறது.

உயிர் உரங்கள் 13 தோட்டக்கலை வட்டார உதவி இயக்குநர் அலுவலகங்களுக்கு அனுப்பி விற்கப்படும். அரசு விலையில் விவசாயிகள் வாங்கலாம். இதன்மூலம் செயற்கை உரங்களின் பயன்பாடு குறையும். மண்வளம் பாதுகாக்கப்படும். நோய் தாக்கம் குறைந்து, விளைச்சலும் அதிகரிக்கும். மருந்து அடிக்கும் செலவு குறையும். ஆய்வக தொழில்நுட்பவியலாளராக முத்துராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

தோட்டக்கலை உதவி இயக்குநர் பேபி: ஏராளமான விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களுக்கு தேவையான உயிர் உரங்களை தயாரித்து வழங்க இம்மையம் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.திருப்பரங்குன்றம் பாரம்பரிய மலர்கள் மகத்துவ மையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வகம். அடுத்த படம்: ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்டுள்ள உயிர் உரங்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X