தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை இடிக்க முடிவு; கலெக்டர் நடவடிக்கைக்கு வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை இடிக்க முடிவு; கலெக்டர் நடவடிக்கைக்கு வலியுறுத்தல்

Added : செப் 13, 2021
Share
தேனி : தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடத்தை இடித்து புதிதாக கட்ட ஊரக வளர்ச்சித்துறை முடிவு செய்துள்ளதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இக்கட்டடம் அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் கக்கனால் 1961 ஜூலை 18 ல் அடிக்கல் நாட்டப்பட்டு ஐந்தாண்டு பணிகள் முடிந்து 1965 ஜன., 15ல் திறந்து வைக்கப்பட்டது. தற்போது பலமில்லை எனக்கூறி இடிப்பதற்காக கட்டட மண் துகள் பரிசோதனை

தேனி : தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடத்தை இடித்து புதிதாக கட்ட ஊரக வளர்ச்சித்துறை முடிவு செய்துள்ளதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இக்கட்டடம் அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் கக்கனால் 1961 ஜூலை 18 ல் அடிக்கல் நாட்டப்பட்டு ஐந்தாண்டு பணிகள் முடிந்து 1965 ஜன., 15ல் திறந்து வைக்கப்பட்டது. தற்போது பலமில்லை எனக்கூறி இடிப்பதற்காக கட்டட மண் துகள் பரிசோதனை பணிகள் இரண்டு நாட்களாக நடந்து வருகிறது.

நிதி பற்றாக்குறை உள்ள நிலையில் இது அரசு பணத்தை வீணடிக்கும் செயல். நன்றாக இருக்கும் கட்டடத்தை இடிக்க வேண்டாம். இதில் கலெக்டர், முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கூறியுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X