சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புகையிலை பொருட்கள் கடத்திய 85 பேர் கைது

Added : செப் 13, 2021
Share
Advertisement
திண்டுக்கல், : திண்டுக்கல்லில் கடந்த ஒரு மாதத்தில் ரூ.10.86 லட்சம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, 85 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க, எஸ்.பி., ஸ்ரீனிவாசன் உத்தரவிட்டுள்ளார்.இதன்படி, மாவட்டம்

திண்டுக்கல், : திண்டுக்கல்லில் கடந்த ஒரு மாதத்தில் ரூ.10.86 லட்சம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, 85 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க, எஸ்.பி., ஸ்ரீனிவாசன் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, மாவட்டம் முழுவதும் நடத்திய சோதனையில் கடந்த ஒரு மாதத்தில் 85 பேர் கைதாகியுள்ளனர். அதில் 4 பேர் குண்டாஸில் சிறையில் அடைக்கப்பட்டனர். இதுவரை ரூ.10.86 லட்சம் மதிப்பிலான ஆயிரத்து 780 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

எந்த விதத்திலும் மாணவர்கள் தவறான வழியில் சென்றுவிட கூடாது.எனவே, பள்ளி, கல்லுாரிகள் இருக்கும் பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை நடத்தப்படுகிறது. குட்கா விற்பனையில் எவர் ஈடுபட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X