பொது செய்தி

தமிழ்நாடு

வனப்பகுதி ரோடு, மின்நிலையங்களுக்கு குத்தகை தொகை வசூலிக்க முடிவு

Added : செப் 13, 2021
Share
Advertisement
கம்பம் : தேனி மாவட்டத்தில் கம்பமெட்டு ரோடு, குமுளி ரோடு, லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின்நிலையம், மேகமலை ரோடு உள்ளிட்ட பல பகுதிகள் வனத்துறைக்கு சொந்தமானது. இதை நெடுஞ்சாலைத்துறை, மின்வாரியம் குத்தகை எடுத்து கட்டுமான பணி செய்துள்ள நிலையில் நிலுவை குத்தகை தொகையை வசூலிக்க வனத்துறை முடிவு செய்துள்ளது.இதுப்பற்றி வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், வனத்துறை இடங்களில்

கம்பம் : தேனி மாவட்டத்தில் கம்பமெட்டு ரோடு, குமுளி ரோடு, லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின்நிலையம், மேகமலை ரோடு உள்ளிட்ட பல பகுதிகள் வனத்துறைக்கு சொந்தமானது. இதை நெடுஞ்சாலைத்துறை, மின்வாரியம் குத்தகை எடுத்து கட்டுமான பணி செய்துள்ள நிலையில் நிலுவை குத்தகை தொகையை வசூலிக்க வனத்துறை முடிவு செய்துள்ளது.

இதுப்பற்றி வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், வனத்துறை இடங்களில் பல்வேறு துறை சார்பில் ரோடு, மின்நிலையங்கள் உள்ளிட்ட கட்டுமானங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குத்தகை தொகை நிலுவை உள்ளது. இதை வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் முறைப்படி பணி துவங்கும். சுருளியாறு நீர் மின்நிலையத்திற்கு 250 ஏக்கர் நிலம் 1978ல் தனியாக பட்டா போட்டு வழங்கப்பட்டதால் அது மின்வாரியத்துக்கே சொந்தம். தொகை செலுத்த தேவையில்லை' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X