பொது செய்தி

தமிழ்நாடு

தேனியில் 410 இடங்களில் முகாம்; ஒரே நாளில் 63,645 பேருக்கு தடுப்பூசி

Added : செப் 13, 2021
Share
Advertisement
தேனி : தேனி மாவட்டத்தில் நேற்று 410 இடங்களில் நடந்த முகாம்களில் 63,645 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.கொரோனா பாதிப்பு தமிழகத்தில் குறைந்து வருகிறது. இருப்பினும் 3ம் அலை முன்னெச்சரிக்கையாக தடுப்பூசி செலுத்தும் பணியை மத்திய, மாநில அரசுகள் முடுக்கி விட்டுள்ளன. அந்த வகையில் நேற்று தமிழகம் முழுவதும் 'மெகா' தடுப்பூசி முகாம் நடந்தது.தேனி மாவட்டத்தில் 410 இடங்களில்

தேனி : தேனி மாவட்டத்தில் நேற்று 410 இடங்களில் நடந்த முகாம்களில் 63,645 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கொரோனா பாதிப்பு தமிழகத்தில் குறைந்து வருகிறது. இருப்பினும் 3ம் அலை முன்னெச்சரிக்கையாக தடுப்பூசி செலுத்தும் பணியை மத்திய, மாநில அரசுகள் முடுக்கி விட்டுள்ளன. அந்த வகையில் நேற்று தமிழகம் முழுவதும் 'மெகா' தடுப்பூசி முகாம் நடந்தது.தேனி மாவட்டத்தில் 410 இடங்களில் காலை 7:00 முதல் இரவு 7:00 மணி வரை முகாம்கள் நடந்தன. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆர்வமாக வந்து கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளை போட்டு கொண்டனர்.

மாற்றுத்திறனாளிகள் 380 பேர் உள்பட மொத்தம் 63,645 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் முதல் தவணையாக 45,615 பேருக்கும், இரண்டாம் தவணையாக 18,030 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டது. முகாம்களை கொரோனா தடுப்பூசி பணிகள் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுரேஷ்குமார் முன்னிலையில் கலெக்டர் முரளீதரன் ஆய்வு செய்தார்.

பரிசு

எருமலைநாயக்கன்பட்டி ஊராட்சியில் நடந்த தடுப்பூசி முகாமினை தலைவர் பால்ராஜ் துவக்கி வைத்தார். பி.டி.ஓ., சேதுகுமார், துணைத்தலைவர் சுசிலா, செயலாளர் பாண்டியராஜ் பங்கேற்றனர். 255 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டதில் முதல் 100 பேருக்கு டிபன்பாக்ஸ் வழங்கப்பட்டது.முந்தைய நாட்களில் தடுப்பூசி செலுத்தியோர் உள்பட 855 பெயரில் குலுக்கல் நடந்தது. இதில் முதல் பரிசாக வேலுச்சாமிக்கு கிரைண்டரும், 2ம் பரிசாக வீரனுக்கு மிக்ஸியும் வழங்கப்பட்டது.தட்டுப்பாடுதேனி வீரபாண்டி அருகே உப்புக்கோட்டை, போடேந்திரபுரம், வடபுதுப்பட்டி, போடி நகராட்சி பகுதி பள்ளிகளில் தடுப்பூசி இல்லாத நிலை ஏற்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதுதவிர மாவட்டத்தின் பிற இடங்களிலும் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X