பொது செய்தி

தமிழ்நாடு

'நீட்' தேர்வு எப்படி; மாணவர்கள் மனம் திறப்பு

Added : செப் 13, 2021
Share
Advertisement
தேனி : கொரோனா தொற்று அச்சம், 'நீட் தேர்வில் விலக்கு பெற்றே தீருவோம்' என கடைசி வரை அரசியல் கள செய்திகளால் ஏற்பட்ட குழப்பம், பிளஸ் 2வில் 45 நாட்களே நேரடி வகுப்புகளில் பங்கேற்ற சோகம் போன்ற பல சவால்களையும் தாண்டி நேற்று நடந்த 'நீட்' நுழைவு தேர்வில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.இத்தேர்வில் இயற்பியல், வேதியியல் பகுதிகளில் தலா 45 வினாக்கள். உயிரியலில் 90 என மொத்தம் 180
 'நீட்' தேர்வு எப்படி; மாணவர்கள் மனம் திறப்பு

தேனி : கொரோனா தொற்று அச்சம், 'நீட் தேர்வில் விலக்கு பெற்றே தீருவோம்' என கடைசி வரை அரசியல் கள செய்திகளால் ஏற்பட்ட குழப்பம், பிளஸ் 2வில் 45 நாட்களே நேரடி வகுப்புகளில் பங்கேற்ற சோகம் போன்ற பல சவால்களையும் தாண்டி நேற்று நடந்த 'நீட்' நுழைவு தேர்வில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

இத்தேர்வில் இயற்பியல், வேதியியல் பகுதிகளில் தலா 45 வினாக்கள். உயிரியலில் 90 என மொத்தம் 180 வினாக்களுக்கு விடையளித்தனர். ஒரு வினாவிற்கு நான்கு மதிப்பெண் வீதம் 720 மதிப்பெண்ணிற்கு தேர்வு எழுதினர் (தவறான வினாவிற்கு மைனஸ் 1 மதிப்பெண்). குறிப்பாக இயற்பியல் பகுதியில் இடம் பெற்ற 45 வினாக்கள் பெரும் சோதனையாக அமைந்ததாக மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.


பதட்டம் குறைந்தது


ஜே.ஹேமஹரிதா, தேனி2020ல் பிளஸ் 2 முடித்தேன். பள்ளி பாடங்களை முறையாக கற்றது, ஆசிரியர்களின் ஆலோசனை உதவிகரமாக இருந்தது. ஏற்கனவே மாதிரி தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளை இயற்பியலில் வந்திருந்தாலும், நேரடியாக பதிலளிக்க முடியாமல் இருந்தது சிரமமாக இருந்தது. இருப்பினும் அதிகப்படியாக வினாக்களுக்கு விடை அளித்துள்ளேன். வேதியியல் எளிமையாக இருந்தது. குறிப்பாக இந்த முறை தேர்வு நடத்தும் விதம், எங்களிடம் பதட்டத்தை முற்றிலும் குறைத்து தைரியத்தை ஏற்படுத்தியுள்ளது.'' என்றார்.


இயற்பியல் வினாக்கள் கடினம்


எஸ்.மஹதி, மதுரை: தேர்வுக்கு வந்தது மாதிரியே தெரியவில்லை. நல்ல பாதுகாப்போடு இடர்பாடுகளின்றி எளிமையாக தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. வேதியியல், உயிரியியல் எளிதாக இருந்தது. இயற்பியலில் 27 வினாக்கள் கடினம். இதில் 20 வினாக்கள் 'சாய்ஸ் டைப்' வினாக்கள் வந்தது உதவி புரிந்தது.


தேர்வு ஏற்பாடுகள் சிறப்பு


எ.தஸ்மீஹா, மதுரை : பள்ளியில் 2 ஆண்டுகள் தொடர் பயிற்சி எடுத்தது உதவியாக இருந்தது. இயற்பியல் கடினமாக இருந்தாலும் பள்ளி பாடத்துடன் தேர்வு எழுதுவதற்கான செயல்முறை, நேர மேலாண்மையை கணக்கில் கொண்டு தேர்வு எழுதும் விதம் குறித்து பயிற்சி பெற்றது உதவியாக இருந்தது. குறிப்பாக தேர்வு எழுதும் வளாகத்தில் உடை, முகக்கவசம், நகைகள் அணியாமல் பெரும்பாலானோர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்தது சிறப்பு. இதனால் மகிழ்ச்சியாக தேர்வு எழுதினேன்.


ஆன்-லைன் பயிற்சி உதவியது


ஏ.லக்னேஷ், ராமநாதபுரம்: உயிரியல், வேதியியல் கேள்விகள் மிக எளிமையாக இருந்தது. இயற்பியல் கேள்விகள் சிரமமாக இருந்தது. இருப்பினும் பள்ளி சார்பில் 2 ஆண்டு ஆன்-லைன் பயிற்சி உறுதுணையாக இருந்தது. தற்போது நன்றாக எழுதியது மகிழ்ச்சி அளிக்கிறது. தேர்வுக்கான 3 மணி நேரத்தில் இரண்டரை மணி நேரத்தில் அனைத்து கேள்விகளையும் புரிந்து பதிலளித்துள்ளேன். வெற்றிக்கான நம்பிக்கை பிறந்துள்ளது'' என்றார்.


நேரம் நிறைவாக கிடைத்தது


எஸ்.பாலாஜி, கோகிலாங்குளம், மதுரை : 2020ல் பிளஸ் 2 முடித்தேன். நீட் தேர்வுக்காக பெற்றோர், ஆசிரியர்கள் அதிக ஊக்கம் தந்தனர். வேதியியல், உயிரியல், இயற்பியல் என முக்கிய பாடப்பிரிவுகளை பிரித்து புரிந்து படித்ததால் எளிமையாக இருந்தது. வினாத்தாளில் இருந்த 200 வினாக்களில் 180 வினாக்களுக்கு 4 மதிப்பெண் அடிப்படையில், 20 வினாக்கள், விரும்பினால் விடையளிக்கலாம்' என்ற ரீதியில் இருந்ததால் பதில் தெரியாத கேள்விகளை முதல் அரைமணி நேரத்தில் பிரித்து, பதில் தெளிவாக தெரிந்த கேள்விகளுக்கு விடை அளிக்க நேரம் கிடைத்தது. உண்மையிலேயே அதிக மதிப்பெண் எடுக்க பள்ளி பயிற்சி உதவி புரிந்தது.


வெற்றி அறிகுறி


ஆர்.கே.சூர்யபிரகாஷ், மதுரை: 2020ல் பிளஸ் 2 முடித்தேன். உயிரியல் பாட கேள்விகள் எளிமையாக இருந்தன. இயற்பியல் வினாக்களில் 30 வினாக்கள், வேறு நீட் மாதிரியான போட்டி தேர்வுகளில் கேட்கப்பட்டவை. ஆனாலும் நேரடியாக விடையளிக்கும் வகையில் இல்லாமல் இருந்ததால் சிரமம் ஏற்பட்டது. நிதானமாக ஒன்றிரண்டு முறை படித்து சரியாக விடை அளித்துள்ளேன். அதனால் வெற்றிக்கான அறிகுறி தோன்றியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X