பொது செய்தி

தமிழ்நாடு

நீட் தேர்வு எளிமை: மாணவர்கள் கருத்து

Added : செப் 13, 2021
Share
Advertisement
திண்டுக்கல், : கொரோனா தொற்று அச்சம், 'நீட் தேர்வில் விலக்கு பெற்றே தீருவோம்' என கடைசி வரை அரசியல் கள செய்திகளால் ஏற்பட்ட குழப்பம், பிளஸ் 2 வில் 45 நாட்களே நேரடி வகுப்புகளில் பங்கேற்ற சோகம் போன்ற பல சவால்களையும் தாண்டி நேற்று நடந்த 'நீட்' நுழைவு தேர்வில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.இத்தேர்வில் இயற்பியல், வேதியியல் பகுதிகளில் தலா 45 வினாக்கள். உயிரியலில் 90 என
 நீட் தேர்வு எளிமை: மாணவர்கள் கருத்து

திண்டுக்கல், : கொரோனா தொற்று அச்சம், 'நீட் தேர்வில் விலக்கு பெற்றே தீருவோம்' என கடைசி வரை அரசியல் கள செய்திகளால் ஏற்பட்ட குழப்பம், பிளஸ் 2 வில் 45 நாட்களே நேரடி வகுப்புகளில் பங்கேற்ற சோகம் போன்ற பல சவால்களையும் தாண்டி நேற்று நடந்த 'நீட்' நுழைவு தேர்வில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

இத்தேர்வில் இயற்பியல், வேதியியல் பகுதிகளில் தலா 45 வினாக்கள். உயிரியலில் 90 என மொத்தம் 180 வினாக்களுக்கு விடையளித்தனர். ஒரு வினாவிற்கு நான்கு மதிப்பெண் வீதம் 720 மதிப்பெண்ணிற்கு தேர்வு எழுதினர் (தவறான வினாவிற்கு மைனஸ் 1 மதிப்பெண்). குறிப்பாக இயற்பியல் பகுதியில் இடம் பெற்ற 45 வினாக்கள் பெரும் சோதனையாக அமைந்ததாக மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.


தேர்வு கடினமில்லை


விபாஷினி, திண்டுக்கல்: முதல் முறையாக இந்த தேர்வு எழுதினேன். இந்த தேர்விற்காக 6 மாதமாக படித்தேன். படித்த பகுதிகளில் இருந்து கேள்விகள் இடம் பெற்றிருந்ததால் கொஞ்சம் எளிமையாக தான் இருந்தது. திண்டுக்கல்லில் மையம் இருந்ததால் பதற்றம் ஏதும் இல்லை. நல்ல முறையில் தேர்வு எழுதியுள்ளேன்.


எளிமையாக இருந்தது


உதய பிரகாஷ், தேவத்தூர்: தேர்வு எளிமையாக தான் இருந்தது. முதல் முறையாகஇந்த தேர்வு எழுதியது புதிய அனுபவமாக இருந்தது. படித்த கேள்விகளே வந்திருந்ததால் அச்ச உணர்வு குறைவாகவே இருந்தது. நீட் தேர்வுக்காக வீட்டில் இருந்தே தான் படித்தேன். முடிந்த வரை நல்ல முறையில் தேர்வு எழுதியுள்ளேன்.


கடுமையாக படித்தேன்


சந்தியா, திண்டுக்கல்: இரண்டாவது முறையாக நல்ல முறையில் எழுதியுள்ளேன். கடந்தாண்டு நடந்த தேர்வு மிகவும் கடினமாக இருந்தது. இந்த முறை வீட்டிலிருந்து 6 மாதம், நீட் கோச்சிங் கிளாஸில் ஒரு மாதம் என கடுமையாக படித்தேன். கஷ்டப்பட்டு படித்ததற்கு பலனாக தேர்வு மிக எளிமையாக இருந்தது. கொரோனா பரவலை தடுக்க தேவையான பாதுகாப்பு வசதிகளை செய்திருந்தனர்.


எளிதான வினாத்தாள்


நிவேதா, திண்டுக்கல்: இரண்டாவது முறையாக எழுதியுள்ளேன். கடந்தாண்டை விட இந்தாண்டு வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்தது. வேதியியல் பாடம் மிக சுலபமாக இருந்தது. சி.பி.எஸ்.இ., சிலபஸ்சில் படித்தால் இன்னும் எளிது தான். தேர்வு மையத்திற்குள் நுழைந்தது முதல் தேர்வு எழுதிவிட்டு வெளியில் வரும் வரை சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது.


கொஞ்சம் கடினம்


ஹிரிணி பிரியா, தேனி: முதல் முறையாக இந்த தேர்வு எழுதினேன். இரண்டு ஆண்டுகள் ஆன்லைன் வகுப்பிலே சென்றதால் கொஞ்சம் கடினமாக இருந்தது. எதில் இருந்து எந்தெந்த கேள்விகள் கேட்கப்படும் என்பதில் குழப்பம் இருந்தது. வீட்டில் இருந்தே படித்ததால் என்னால் முடிந்த வரை, நல்ல முறையில் தேர்வு எழுதியுள்ளேன்.


தேர்வு கடினமில்லை


விபாஷினி, திண்டுக்கல்: முதல் முறையாக இந்த தேர்வு எழுதினேன். இந்த தேர்விற்காக 6 மாதமாக படித்தேன். படித்த பகுதிகளில் இருந்து கேள்விகள் இடம் பெற்றிருந்ததால் கொஞ்சம் எளிமையாக தான் இருந்தது. திண்டுக்கல்லில் மையம் இருந்ததால் பதற்றம் ஏதும் இல்லை. நல்ல முறையில் தேர்வு எழுதியுள்ளேன்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X