தமிழ்நாடு

மணல் திருட்டு தாராளம்; அலட்சியத்தில் அதிகாரிகள்

Added : செப் 13, 2021
Share
Advertisement
கன்னிவாடி : ரெட்டியார்சத்திரம், ஆத்துார் பகுதியில் கண்மாய், ஓடைகளில் மணல் கொள்ளை தாராளமாக நடக்கிறது.ரெட்டியார்சத்திரம், ஆத்தூர் பகுதியில் போதிய மழை இல்லை. இதனை பயன்படுத்தி நீரோடைகள், கிராம கண்மாய்களில் மணல் திருடும் கும்பலின் அட்டூழியம் அதிகரித்து வருகிறது. அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாலும் நடவடிக்கை எடுக்க தாமதிப்பதாக புகார் எழுந்துள்ளது.மார்க்சிஸ்ட் கம்யூ.,

கன்னிவாடி : ரெட்டியார்சத்திரம், ஆத்துார் பகுதியில் கண்மாய், ஓடைகளில் மணல் கொள்ளை தாராளமாக நடக்கிறது.

ரெட்டியார்சத்திரம், ஆத்தூர் பகுதியில் போதிய மழை இல்லை. இதனை பயன்படுத்தி நீரோடைகள், கிராம கண்மாய்களில் மணல் திருடும் கும்பலின் அட்டூழியம் அதிகரித்து வருகிறது. அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாலும் நடவடிக்கை எடுக்க தாமதிப்பதாக புகார் எழுந்துள்ளது.மார்க்சிஸ்ட் கம்யூ., ரெட்டியார்சத்திரம் ஒன்றிய செயலாளர் சக்திவேல் கூறியது: தெத்துப்பட்டி, சந்தமநாயக்கன்பட்டி, குடகனாறு, மாங்கரை ஆற்றில் இரவு, பகலாக மணல் திருட்டு நடக்கிறது.

விவசாய அனுமதி, கிராவல் மண் என போலி அனுமதி சீட்டு மூலம் கடத்துகின்றனர். இவ்வாறு கடத்தும் மணலை தனியார் தோட்டங்களில் பதுக்கி விற்பனை நடக்கிறது. அதிகாரிகள் அலட்சியத்தால் நிலத்தடி நீர்மட்டம், விவசாயம் பாதிக்கும் அபாயம் நிலவுகிறது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X