பொது செய்தி

தமிழ்நாடு

இன்றும், நாளையும் 4 மாவட்டங்களில் மழை

Updated : செப் 13, 2021 | Added : செப் 13, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை : 'நான்கு மாவட்டங்களில் இன்றும், நாளையும் கன மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தென்மேற்கு பருவக் காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் இன்றும், நாளையும் கன மழை பெய்யும். மற்ற

சென்னை : 'நான்கு மாவட்டங்களில் இன்றும், நாளையும் கன மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



latest tamil news


சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தென்மேற்கு பருவக் காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் இன்றும், நாளையும் கன மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், வரும் 15ம் தேதி கன மழை பெய்யும்.

வட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.சென்னையில் இன்று வானம் மேக மூட்டமாக காணப்படும். சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. நேற்று காலை நிலவரப்படி, வால்பாறையில் 9 செ.மீ., மழை பெய்துள்ளது.மத்திய கிழக்கு மற்றும்அதையொட்டிய வட கிழக்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று, ஆழ்ந்த காற்றழுத்த பகுதியாக மாறியுள்ளது.


latest tamil news


இது, மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று மாறும்.எனவே, வங்கக் கடலின் வடமேற்கு, வட ஆந்திர கடலோரம் மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகள், மேற்கு வங்கம், ஒடிசா கடலோர பகுதிகளில் மணிக்கு 65 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே, இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
13-செப்-202108:13:44 IST Report Abuse
Natarajan Ramanathan புவியரசனே சொல்லிட்டாரா? அப்படி என்றால் கண்டிப்பாக மழை இருக்காது...
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
13-செப்-202107:27:00 IST Report Abuse
Duruvesan எங்கள் தமிழ் தந்தை விடியலின் ஆட்சியில் மழை கொட்டும், பாலும் தேனாரும் ஓடும்
Rate this:
Subramanian Narayanaswamy - Madurai,இந்தியா
13-செப்-202108:36:48 IST Report Abuse
Subramanian Narayanaswamyஒழுங்கா தமிழ் பேச தெரியாதவனெல்லாம் தமிழ் தந்தையா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X